
மகளிர் உரிமை தொகைக்கு கூடுதல் பெண்கள் தகுதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசின் சார்பில், தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தரப்பட்டுவருகிறது.
இந்த எண்ணிக்கை தற்போது உயர்ந்து, கூடுதலாக 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்கள் தகுதியுடைவர்களாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் விரைவில் மகளிர் உரிமைத் தொகை தரப் போகிறோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
வரும் ஜூலை 10-ஆம் நாள் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
அதன் வீடியோ பதிவில் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு
சாதனைகளால் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் @arivalayam-த்தின் வேட்பாளராக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திரு. அன்னியூர் சிவா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்!#VikravandiByElection #Vote4DMK pic.twitter.com/Oil1HPF5eH
— M.K.Stalin (@mkstalin) July 5, 2024
உதவித்தொகை
மகளிர் உதவித்தொகை
அந்த வீடியோ பதிவில், "நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கடந்த மூன்றாண்டு காலத்தில் செய்து தரப்பட்டிருக்கும் நலத்திட்டங்களை விவரித்து சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது! 1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகிறார்கள்".
"இந்த மாதத்தில் இருந்து புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை தரப் போகிறோம்! மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தரப்பட்டிருக்கிறது.
"'நான் முதல்வன்' திட்டத்தின் மூலமாக, இளைஞர்கள் அனைத்து வேலைகளையும் பெற தகுதி உள்ளவர்களாக உயர்த்தப்பட்டு வருகிறார்கள்".
"'புதுமைப்பெண் திட்டம்' மூலமாக, அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக் கல்விக்கு வரும் மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது" என தெரிவித்தார்.