கலைஞர் எனும் தாய் புத்தகம் வெளியீடு; முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழகத்தின் பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ள எ.வ.வேலு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனான தனது நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் 'கலைஞர் எனும் தாய்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதற்கான வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) மாலை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, அதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி ஹிந்து என் ராம் உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். புத்தக வெளியீட்டிற்கு பிறகு கலைஞர் எனும் தாய் புத்தகத்தின் காட்சி வடிவத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.