
தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த கிளாசிக் வீடியோ
செய்தி முன்னோட்டம்
இன்று, ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. அதுநாள் வரை மெட்ராஸ் ஸ்டேட் எனக்குறிப்பிடப்பட்ட பெயரை மாற்றக்கோரி பல தொடர் போராட்டங்கள் நடைபெற்றதை அடுத்து, 1968-இல், ஜூலை 18 அன்று நாடாளுமன்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, அதே ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது.
1969 ஆண்டு, ஜனவரி 14ஆம் தேதி முதல், சென்னை மாகாணம், தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது.
இந்த வரலாற்று மசோதா இயற்றப்பட்ட நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என கடந்த 2021ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அந்த விதத்தில் முன்னாள் முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் பேசிய வீடியோ காட்சியை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
தமிழ்நாடு நாள் வரலாறு
ஜூலை 18: தமிழ்நாடு நாள் இன்று!
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 18, 2024
1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி சென்னை மாகாணம் "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டப்பட்டது.#TamilNadu | #TamilNaduDay | #TamilNaduFormationDay | #Tamil pic.twitter.com/FhFJvb9hIG
ட்விட்டர் அஞ்சல்
அண்ணா சட்டப்பேரவையில் பேசிய வீடியோ
தமிழ்நாடு வாழ்க!
— M.K.Stalin (@mkstalin) July 18, 2024
தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க!#வாழ்க_தமிழ்நாடு! pic.twitter.com/fLZt5L3HhL