
வீடியோ: தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க.ஸ்டாலினுக்கு மைசூர்பாக்கை பரிசாக வழங்கிய ராகுல் காந்தி
செய்தி முன்னோட்டம்
மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று இரவு சிங்காநல்லூரில் உள்ள இனிப்பு கடைக்கு சென்றார்.
"ராகுல் காந்தி வந்தபோது நாங்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தோம். அவருக்கு (குலாப்) ஜாமூன் பிடிக்கும் என்பதால், ஒரு கிலோ ஸ்வீட்டை அவர் வாங்கினார். மற்ற இனிப்புகளையும் டேஸ்ட் செய்து பார்த்தார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 25-30 நிமிடங்களுக்கு அவர் எங்கள் கடையில் தான் இருந்தார்"என்று கடையின் உரிமையாளர் பாபு தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு மைசூர் பாக்கை வாங்கிய ராகுல் காந்தி, அதை மு.க.ஸ்டாலினுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
இந்த தகவல்களை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகும் ராகுல் காந்தியின் வீடியோ
Shri @RahulGandhi gifts famous Mysore Pak to Shri @mkstalin.
— Congress (@INCIndia) April 12, 2024
Celebrating the loving relationship he shares with the people of Tamil Nadu. pic.twitter.com/Lw8vYrCC8L