தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று அமெரிக்காவிற்கு பறக்கும் முதல்வர் ஸ்டாலின்; யாரையெல்லாம் சந்திக்கிறார்?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்த்து வரும் நோக்கில் இன்று அமெரிக்காவிற்கு பயணமாகிறார். இந்த பயணத்தின்போது, பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை முதலமைச்சசர் சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து ஆகஸ்ட் 29ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். பின்னர் ஆகஸ்ட் 31ம் தேதி புலம் பெயர் தமிழர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 2ம் தேதி சிக்காகோ சென்று பல்வேறு முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்திக்கிறார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.