
கருணாநிதி 101-வது பிறந்தநாளுக்கு ஸ்டாலின் பகிர்ந்த வாழ்த்து வீடியோ
செய்தி முன்னோட்டம்
மறைந்த தமிழக முதலமைச்சரும், மூத்த திமுக தலைவருமான கருணாநிதியின் 101 -வது பிறந்தநாள் இன்று.
இதனையடுத்து, "நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை உங்கள் மகனாக நான் செய்துவருகிறேன்" என முதல்வர் ஸ்டாலின் ஒரு வாழ்த்து வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"தலைவர்களுக்கெல்லாம் தலைவர்.. முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர்.. கலைஞர்களுக்கெல்லாம் கலைஞர். நவீன தமிழ்நாட்டை செலுக்கிய சிற்பி, நாடே அண்ணாந்து பார்த்த அரசியல் ஞானி. ஒரு ரூபத்தில் வாழ்ந்த பல ரூபம் கலைஞர்" என புகழாராம் சூட்டியுள்ளார்.
மேலும், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்தில், காலை 9 மணியளவில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் முழு உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
ட்விட்டர் அஞ்சல்
M.K.ஸ்டாலின் பகிர்ந்த வாழ்த்து வீடியோ
தலைவரே! பாதை அமைத்தீர்கள்; பயணத்தைத் தொடர்கிறோம்!#கலைஞர்100 pic.twitter.com/7EnwdrOj7c
— M.K.Stalin (@mkstalin) June 3, 2024