Page Loader
அம்மா உணவகங்களுக்கான இ-பில்லிங் இயந்திரங்கள் வாங்க டெண்டர் அறிவிப்பு
அம்மா உணவாக ஆய்வின் போது தமிழக முதல்வர் ஸ்டாலின்

அம்மா உணவகங்களுக்கான இ-பில்லிங் இயந்திரங்கள் வாங்க டெண்டர் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 03, 2024
03:14 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட ரூ.21 கோடி ஒதுக்கி உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக சென்னையிலுள்ள 393 அம்மா உணவகங்களுக்கான நவீனப்படுத்தும் ஒரு முயற்சியாக, விற்பனைகளை சீரமைக்க ரூ.72 லட்சத்திற்கு இ-பில்லிங் இயந்திரங்கள் வாங்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் மூலம் தினசரி 1.50 லட்சம் பயனாளிகள் பயன்பெறறு வருகின்றனர். அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் பொருட்களை மானிய விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாகவும், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலமும், பெறப்பட்டு வருகிறது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய பாத்திரங்களை வாங்க ரூ.7 கோடி வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post