அம்மா உணவகங்களை பராமரிக்க ரூ.21 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை திடீர் ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட ரூ.21 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர். இது குறித்து தமிழக அரசு சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், அம்மா உணவகங்கள் மூலம் தினசரி 1.50 லட்சம் பயனாளிகள் பயன்பெறறு வருகின்றனர். அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் பொருட்களை மானிய விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாகவும், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலமும், பெறப்பட்டு வருகிறது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய பாத்திரங்கள் மற்றும் கருவிகளை ரூ.7 கோடியில் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். மேலும், ரூ.14 கோடியில் இந்த உணவகங்களை புனரமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.