NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / வாழை படத்தை பார்த்து மாரி செல்வராஜை பாராட்டிய மு.க ஸ்டாலின்; நன்றி தெரிவித்த இயக்குனர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாழை படத்தை பார்த்து மாரி செல்வராஜை பாராட்டிய மு.க ஸ்டாலின்; நன்றி தெரிவித்த இயக்குனர்
    மாரி செல்வராஜை பாராட்டிய மு.க ஸ்டாலின்

    வாழை படத்தை பார்த்து மாரி செல்வராஜை பாராட்டிய மு.க ஸ்டாலின்; நன்றி தெரிவித்த இயக்குனர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 02, 2024
    01:13 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியுள்ள 'வாழை' திரைப்படம் சென்ற வாரம் வெளியானது. படம் வெளியானதிலிருந்து பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

    அழுத்தமான திரைக்கதை மற்றும் இயக்கத்திற்காக மாரி செல்வராஜை புகழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் திரைப்படத்தை பாராட்டி, சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர், "உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை திரைப்படத்தினை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்! பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!" எனத்தெரிவித்துள்ளார்.

    "தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.

    நன்றி

    முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்

    முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், "என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன் மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    முதல்வரின் பதிவு

    உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி @mari_selvaraj அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்💐

    பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார்…

    — M.K.Stalin (@mkstalin) September 2, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    மாரி செல்வராஜின் பதிவு

    என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன் மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஐயா @mkstalin அவர்களுக்கு என்… pic.twitter.com/XOIWPqEfmm

    — Mari Selvaraj (@mari_selvaraj) September 2, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாரி செல்வராஜ்
    மு.க ஸ்டாலின்
    திரைப்படம்
    தமிழக முதல்வர்

    சமீபத்திய

    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்
    உலக சுகாதார நிறுவனம் முதன்முதலில் தொற்றுநோய் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறது- அதன் அர்த்தம்? தொற்று நோய்

    மாரி செல்வராஜ்

    பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் அவரது 5வது திரைப்படம் பா ரஞ்சித்
    பைசன் காளமாடன்: துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு துருவ் விக்ரம்
    வாழை தொழிலாளர் சமூகத்தின் வலியை பேசும் மாரி செல்வராஜின் 'வாழை'; வெளியான ட்ரைலர் விஜய் சேதுபதி
    "மாரி செல்வராஜை நினைத்தால் பெருமையாகவும் இருக்கு பொறாமையாகவும் இருக்கு": இயக்குனர் மணிரத்னம் புகழாரம் தமிழ் சினிமா

    மு.க ஸ்டாலின்

    மார்ச் 8: உலக மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்  சர்வதேச மகளிர் தினம்
    திமுகவுக்கு கமல் ஹாசன் ஆதரவு: மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிப்பு  திமுக
    'தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்': முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம்
    முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் முதல் அமைச்சர்

    திரைப்படம்

    கமல்ஹாசன்- மணிரத்னத்தின் தக் லைஃப் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியது கமல்ஹாசன்
    'கல்கி' நடிகர்களின் சம்பளம்: பிரபாஸ் ₹80 கோடி, தீபிகா ₹20 கோடி  திரைப்பட அறிவிப்பு
    கலைஞர்கள் நல நிதிக்காக கர்நாடக அரசு திரைப்பட டிக்கெட்டுகள், OTT சந்தாக்கள் மீது வரி விதிக்க திட்டம் கர்நாடகா
    'டெட்பூல் & வால்வரின்'க்கு R செர்டிபிகேட் தந்தது சென்சார்; அப்படியென்றால் என்ன, குழந்தைகளுக்கு ஏற்றதா? ஹாலிவுட்

    தமிழக முதல்வர்

    விரைவில் திருநங்கைகளுக்கும் உரிமை தொகை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு  தமிழக அரசு
    சிவன், வீரமுத்துவேல் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்  இஸ்ரோ
    முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு; வெளியான மருத்துவ அறிக்கை  முதல் அமைச்சர்
    தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை தீபாவளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025