சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடுமபத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த நபர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் பலி, ஒருவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர சேவையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறியவும், தொழிற்சாலையில் உள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை மதிப்பிடவும் உள்ளூர் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தலா 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
இந்நிலையில், சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடுமபத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பட்டாசு உற்பத்தி அலகுகளில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்பதை இந்த விபத்து மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பிப்ரவரி 2024 இல், விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பெண்கள் உட்பட ஒன்பது பேர் இறந்தனர் மற்றும் ஏழு பேர் படுகாயமடைந்தனர். முன்னதாக, ஜனவரி 24ஆம் தேதி, இதே மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.