மத்திய அரசு: செய்தி
புற்றுநோய் மருந்துகளின் விலை 70% வரை குறைகிறது: வர்த்தக லாப வரம்பிற்கு மத்திய அரசு 30% கட்டுப்பாடு
இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் அதிகப்படியான விலையை கட்டுப்படுத்தும் வகையில், பட்டியலிடப்படாத புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை 30%ஆகக் குறைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அக்டோபர் 15 முதல் அமலாகவிருந்த யுபிஐ கட்டணம் ஒத்திவைப்பா? மத்திய அரசு பரிசீலனை என தகவல்
யுபிஐ முறையில் மேற்கொள்ளப்படும் பெரிய வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் திட்டத்தை அக்டோபர் 15 முதல் அமல்படுத்துவதற்கு பதிலாக, வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு ₹4,000: ரூ.603.34 கோடி சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு அரசாணை
தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, 2025-2026ஆம் ஆண்டின் அரவைப் பருவத்திற்கு சிறப்பு ஊக்கத் தொகையாக முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ.603.34 கோடி நிதியினை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத் தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன சட்டத் தீர்ப்பு: திரும்பப் பெறக் கோரும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்கள் (ECs) நியமனம் தொடர்பான 2023 ஆம் ஆண்டு சட்டத்தை அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்ற கோரும் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் அளித்த மாறுபட்ட தீர்ப்பை திரும்ப பெறக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விவசாயத் துறைக்கு வரி விலக்கு: விதைகளின் சேமிப்பு மற்றும் டிராக்டர் டயர்களுக்கான ஜிஎஸ்டி குறைகிறது
விவசாயத் துறையின் நிதி சுமையைக் குறைக்கும் வகையில், அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விதை சேமிப்பு கிடங்கு வசதிகள் மற்றும் டிராக்டர் டயர்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
விமான எரிபொருள் விலை உயர்வு: மத்திய அரசிடம் இந்திய விமான நிறுவனங்கள் அவசர கோரிக்கை
மேற்கு ஆசியப் பகுதியில் தொடரும் போர் பதற்றம் காரணமாக விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், நிதியுதவி மற்றும் வரி விலக்குகளைத் தொடர கோரி இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு(FIA) மத்திய அரசுக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளது.
ரிலையன்ஸ்-பிபி நிறுவனங்களுக்குப் பெரும் நிம்மதி! ஆழ்கடல் இயற்கை எரிவாயு உச்ச வரம்பு விலையை உயர்த்தியது மத்திய அரசு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிபி நிறுவனங்களின் கேஜி-டி6 போன்ற ஆழ்கடல் மற்றும் கடினமான இயற்கை எரிவாயு படுகைகளிலிருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவிற்கான உச்ச வரம்பு விலையை மத்திய அரசு அக்டோபர் 1 முதல் $9.89/MMBtu (ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்) ஆக உயர்த்தியுள்ளது.
இனி ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் கிடையாதா? அக்டோபர் 7 கூட்டத்தில் மத்திய அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கைது செய்யும் அதிகாரத்தை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சீனாவிற்கு பதிலடி! கோக்ரா, ஹாட் ஸ்ப்ரிங் உட்பட லடாக்கின் 28 எல்லை இடங்களை வரைபடத்தில் இணைத்து இந்தியா அதிரடி
மத்திய அரசு, லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள கோக்ரா மற்றும் ஹாட் ஸ்ப்ரிங் உள்ளிட்ட 28 முக்கியமான மூலோபாய புவியியல் இடங்களை இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரைபடவியல் முகமையான சர்வே ஆஃப் இந்தியா வரைபடத்தில் முறைப்படி இணைத்துப் பெயரிட்டுள்ளது.
மின்சார கார்களை அதிகமாக விற்றால் கார்ப்பரேட்டுகளுக்கு ஜாக்பாட்! CAFE-III விதிகளால் வரப்போகும் மாற்றம் என்ன?
மத்திய அரசு 2027 ஏப்ரல் 1 முதல் 2032 மார்ச் 31 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கான கார்ப்பரேட் சராசரி எரிபொருள் சிக்கன (CAFE-III) புதிய விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கார்களின் மைலேஜ் இனி அதிகரிக்கும்; ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரும் 'CAFE-3' புதிய விதிகள்
இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் கார்பன் உமிழ்வை குறைக்கவும், எரிபொருள் பயன்பாட்டு திறனை உயர்த்தவும் மத்திய அரசு புதிய 'கேஃப்-3' விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாளை முதல் ரேஷன் கார்டுகள் தற்காலிக முடக்கம்: 1.58 கோடி பயனாளிகளுக்குப் பாதிப்பா? தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
கடந்த 6 மாதங்களாக ரேஷன் பொருட்களை பெறாத 1.58 கோடி பயனாளிகளின் ரேஷன் சலுகைகளை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தற்காலிகமாக முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சமூக வலைதளங்களில் சிறுவர்களுக்கு தடை? உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு
இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தன்னிச்சையாக சமூக வலைதள கணக்குகளை தொடங்குவதைத் தடுக்கும் வகையில், சட்டப்பூர்வ விதிகளை உடனடியாக வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
CBSE 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய மும்மொழி விதியிலிருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய மும்மொழிக் கொள்கையிலிருந்து நடப்பு கல்வியாண்டிற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
UPI கட்டண பாலிசிக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: அக்டோபர் 15 முதல் புதிய MDR விதிகள்
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வணிகர் தள்ளுபடி வீதம் (MDR) கொள்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இனி RTI மூலம் சட்டம் - ஒழுங்கு துறை தகவல்களை பெற முடியாது: தமிழக அரசு போட்ட புது உத்தரவு
தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, காவல் துறை மற்றும் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு தொடர்பான முக்கிய விவரங்களை இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் கேட்டுப் பெற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் 38 லட்சம் கிலோ CO2 குறைப்பு! இந்தியாவில் பிஎம் இ-டிரைவ் திட்டத்தால் நிகழும் பிரம்மாண்ட சுற்றுச்சூழல் புரட்சி
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், சார்ஜிங் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசால் ரூ.10,900 கோடி நிதியில் தொடங்கப்பட்ட பிஎம் இ-டிரைவ் (PM e-DRIVE) திட்டம் தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்யவுள்ளது.
ஓஎஸ்எம் சர்ச்சைக்குப் பின் அதிரடி மாற்றம்! சிபிஎஸ்இ புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி மன்தீப் பண்டாரி நியமனம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி மன்தீப் சிங் பண்டாரி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) நியமிக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் ராணுவச் சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், அம்மாநிலத்தைப் பதற்றமான பகுதியாக அறிவித்து ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை (AFSPA) மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி அருகே ஜங்க் ஃபுட் விற்பனைக்குத் தடை விதிக்க FSSAI திட்டம்; முழு விபரம்
இந்தியாவில் பள்ளி சிறுவர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர ஆலோசித்து வருகிறது.
சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை குறைத்தது மத்திய அரசு: பண்டிகைக் காலத்தில் விலை குறைய வாய்ப்பு
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் வரவுள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 25-ல் முன் கூட்டியே சம்பளம்: 3 நாள் வங்கி வேலைநிறுத்தத்தை ஒட்டி உத்தரவு
செப்டம்பர் 28 முதல் 30 வரை 3 நாட்கள் அகில இந்திய அளவிலான வங்கி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
'வந்தே மாதரம்' பாடாவிட்டால் சிறையா? உச்சநீதிமன்றத்தில் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா வழக்கு
தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலை தடுத்து நிறுத்துபவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், "மதச் சுதந்திர உரிமையின் அடிப்படையில் மனசாட்சிப்படி செயல்படுபவர்கள் மீது எந்தவித குற்றவியல் தண்டனை நடவடிக்கையும் பாயாது" என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இனி சோப், டூத்பேஸ்ட்டிலும் வெஜ், நான்-வெஜ் அடையாளம்: மத்திய அரசு புதிய உத்தரவு
சோப், ஷாம்பூ, டூத்பேஸ்ட் மற்றும் பிற அழகு சாதனப் பொருட்கள் தாவர மூலப் பொருட்களால் தயாரிக்கப்பட்டவையா(Vegetarian) அல்லது விலங்கின பொருட்களால் தயாரிக்கப்பட்டவையா(Non-Vegetarian) என்பதை அவற்றின் பேக்கிங்கில் கட்டாயக் குறியீடுகளை வெளியிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2030-க்குள் ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள்: இஸ்ரோவின் மாபெரும் லட்சியம் சாத்தியமா?
இந்திய விண்வெளி துறை வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதை மாபெரும் லட்சிய இலக்காகக் கொண்டுள்ளது.
வீட்டு கூரை சோலார் பேனல் மானியம்: மத்திய, மாநில அரசுகளின் ரூ.1 லட்சம் நிதியுதவி பெறும் முறை
மின்சார பயன்பாடு அதிகரிப்பு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி சரிவு போன்ற காரணங்களால் ஏற்படும் மின்வெட்டைத் தவிர்த்து, வீட்டு மின் கட்டணத்தைக் குறைக்கும் நோக்கில், வீடுகளின் கூரையில் சோலார் பேனல்கள் அமைக்க தமிழ்நாடு அரசு புதிய மானியத் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறது.
அக்டோபர் 1 முதல் புதிய விதி அமல்! மானிய சிலிண்டர் பெற ஆதார் பயோமெட்ரிக் இணைப்பு கட்டாயம்
மத்திய அரசு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மானிய விலையில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
விக்சித் பாரத் 2047-ல் இளைஞர்களுக்குப் முக்கியப் பங்கு! 51,000 பேருக்குப் பணி நியமனங்களை வழங்கி பிரதமர் மோடி உரை
மத்திய அரசின் 20-வது ரோஜ்கார் மேளா வேலைவாய்ப்பு முகாமில், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
திரைப்படங்களில் போதைப்பொருள் காட்சிகளுக்குப் புதிய கெடுபிடி! 1991 விதிகளுக்குப் பதிலாக மத்திய அரசு புதிய தணிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் செப்டம்பர் 18, 2026 அன்று திரைப்படத் தணிக்கைக்கான புதிய வழிகாட்டுதல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பாஸ்போர்ட் வாங்குவோருக்கு புதிய விதிகள்! உயர்த்தப்பட்ட கட்டணங்கள் & குழந்தைகளுக்கான முக்கிய மாற்றங்கள்; முழு விபரம்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பாஸ்போர்ட் (திருத்தப்பட்ட) விதிகள் 2026-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம்! 140 கோடி மக்களின் ஆற்றல் பாதுகாப்பே இந்தியாவின் முதன்மை இலக்கு; மத்திய அரசு பதிலடி
ரஷ்யா மற்றும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் மீது 100 சதவீதம் வரை அபராத சுங்க வரி விதிக்கவும் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்களுக்கு நிம்மதி! பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி வரிகளைக் குறைத்தது மத்திய அரசு
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் மற்றும் ஏடிஎஃப் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரிகளைக் குறைத்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவப் பொருட்களின் அதிகப்படியான விலை உயர்வு: மத்திய அரசிற்கு மகாராஷ்டிரா FDA கடிதம்
மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருத்துவ பொருட்களின் விலையை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் (FDA) ஆணையர் துகாராம் முண்டே கோரிக்கை விடுத்துள்ளார்.
EPFO வரம்பு ரூ.25,000 ஆக அதிகரிப்பு: 51 லட்சம் பேருக்கு PF, பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் பலன்கள்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கட்டாய சமூக பாதுகாப்புக்கான மாதாந்திரச் சம்பள வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,000 மேலான UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? சாமானியர்களுக்கு பாதிப்பா?
இந்திய தேசிய செலுத்துகை கழகம் (NPCI) வணிகர்களுக்கான UPI பரிவர்த்தனைகள் குறித்த புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு அழுத்தத்தின் எதிரொலி: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காவல் துறையிடம் புகாரளிக்க ஒப்புக்கொண்ட மெட்டா நிறுவனம்
சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களை உடனடியாக உரிய காவல் துறை மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவினரிடம் அறிக்கையாக அளிக்க மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
சில்லறை பணவீக்கம் (CPI): ஆகஸ்ட் மாதத்தில் 4.82%-ஆக உயர்வு; சர்க்கரை, உணவுப் பொருட்களின் விலை ஏற்றமே காரணம்
இந்தியாவில் நுகர்வோர் விலை குறியீட்டின் (CPI) அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தின் 4.45 சதவீதத்திலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 4.82 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சுங்கச்சாவடிகளில் இனி நிற்க வேண்டியதில்லை! மார்ச் 2027க்குள் வரப்போகும் புதிய மாற்றம்; நிதின் கட்கரி முக்கிய அறிவிப்பு
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் மார்ச் 2027க்குள் தடையில்லா சுங்கச்சாவடிகளாக மாற்றப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) அறிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை வங்கி சேவைகள் பாதிப்பு! நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் 8 லட்சம் ஊழியர்கள்; கோரிக்கைகள் என்ன?
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் இணைந்து செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி BRICS மாநாடு: பிரத்யேக விஐபி கார்களைத் தவிர்த்து ஒரே பேருந்தில் பயணிக்கும் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள்
டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டை முன்னிட்டு, டெல்லி மக்கள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுவதை தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது.