Loading...
கார்களின் மைலேஜ் இனி அதிகரிக்கும்; ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரும் 'CAFE-3' புதிய விதிகள்
மத்திய அரசு புதிய 'கேஃப்-3' விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

கார்களின் மைலேஜ் இனி அதிகரிக்கும்; ஏப்ரல் 1, 2027 முதல் அமலுக்கு வரும் 'CAFE-3' புதிய விதிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 30, 2026
05:02 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் பயணிகள் வாகனங்களின் கார்பன் உமிழ்வை குறைக்கவும், எரிபொருள் பயன்பாட்டு திறனை உயர்த்தவும் மத்திய அரசு புதிய 'கேஃப்-3' விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய கேஃப்-3 விதிமுறைகள் 2027 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்து, 2032 மார்ச் 31 வரை 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். எரிபொருள் இலக்கு 100 கிலோமீட்டருக்கு 3.996 லிட்டர் (2027-28) என்ற அளவில் இருந்து, படிப்படியாக 3.3273 லிட்டராக (2031-32) குறைக்கப்படும். இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் வாகனங்களின் எரிபொருள் பயன்பாட்டுத் திறன் சுமார் 16.7% அதிகரிக்கும். இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து புதிய எலக்ட்ரிக், ஹைப்ரிட் மற்றும் பெட்ரோல்/டீசல் பயணிகள் வாகனங்களுக்கும் இது பொருந்தும்.

கட்டுப்பாடுகள்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்

தனிப்பட்ட கார்களுக்கு பதிலாக, ஒரு வாகன தயாரிப்பு நிறுவனம் ஆண்டிற்கு விற்கும் ஒட்டுமொத்த வாகனங்களின் சராசரி உமிழ்வின் அடிப்படையில் இந்த விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் கார்களின் கார்பன் உமிழ்வு மற்றும் உண்மையான எரிபொருள் பயன்பாட்டை ஆண்டுதோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இலக்கை விடச் சிறப்பாக உமிழ்வை குறைக்கும் நிறுவனங்களுக்கு 'கிரெடிட்' புள்ளிகளும், தவறவிடும் நிறுவனங்களுக்கு 'டெபிட்' புள்ளிகளும் வழங்கப்படும்.

வாகனங்களின் சராசரி குறிப்பீட்டு எடை 1,082 கிலோவில் இருந்து 1,229 கிலோவாக (13.6% அதிகரிப்பு) உயர்த்தப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் எடை குறைந்த கார்களுக்கு சாதகமாகவும், பெரிய கார்களுக்கு கூடுதல் கட்டுப்பாடாகவும் இது அமையும்.

சலுகை

சுற்றுச்சூழல் நட்பு வாகனங்களுக்கு சலுகை

சுத்தமான எரிபொருள் மற்றும் நவீனத் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க கார் தயாரிப்பாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

எத்தனால் கலந்த பெட்ரோல், பயோ-ஃப்யூல் மற்றும் CBG வாகனங்களுக்குக் கார்பன் நியூட்ரல் சலுகைகள் உண்டு.

ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம், டயர் அழுத்த கண்காணிப்பு (TPMS) போன்ற எரிபொருள் சேமிப்பு அம்சங்களுக்கு ஒரு தொழில்நுட்பத்திற்கு 1g CO2/km சலுகை வழங்கப்படும் (அதிகபட்சமாக 9g வரை).

இந்த நடவடிக்கை இந்தியாவில் எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT