எத்தனால்: செய்தி
பெட்ரோல் பங்குகளில் எத்தனால் அளவு விவரம் கேட்கும் வழக்கிற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு
பெட்ரோல் பங்குகளில் விநியோகிக்கப்படும் பெட்ரோலில் எவ்வளவு சதவீதம் எத்தனால் கலக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை ஒவ்வொரு விநியோகக் குழாயிலும் கட்டாயமாக அச்சிடக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
1 முட்டை ரூ.10? சாமானியர்களின் முட்டை விலை திடீரென உயர எத்தனால் பெட்ரோல் தான் காரணமா?
இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் எளிமையான புரதச்சத்து ஆதாரமாக விளங்கும் முட்டையின் விலை கடந்த ஓராண்டில் சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
E20 பெட்ரோல் சர்ச்சை; E10 பெட்ரோலை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டம் எனத் தகவல்
இந்தியாவில் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் பயன்பாடு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
சர்க்கரை விலை உயர்வால் இனிப்புகள் விலையேற்றம்: தமிழ்நாட்டில் பால்கோவா, அல்வா விலை உயர்வு
தமிழ்நாட்டில் சர்க்கரை விலை ஒரே மாதத்தில் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, சாமானிய மக்களின் மாதாந்திர மளிகை பட்ஜெட் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கான எத்தனால் கலப்பு விதிகளை மத்திய அரசு கடுமையாக்குகிறது
E20 பெட்ரோலில் குளோரைடு மாசுபாட்டின் அளவை ஒரு மில்லியனுக்கு 3 பாகங்களுக்கும் (ppm) குறைவாகக் கடைப்பிடிப்பதை, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) மற்றும் வாகன எரிபொருள் விநியோகச் சங்கிலியில் உள்ள பிற நிறுவனங்களுக்கு கட்டாயமாக்குவது குறித்து இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.
பழைய வாகனங்களுக்கு E10 பெட்ரோலை மீண்டும் கொண்டு வர தலைமை பொருளாதார ஆலோசகர் பரிந்துரை
இந்தியாவில் E20 (20% எத்தனால் கலக்கப்பட்ட) பெட்ரோல் பயன்பாடு தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பழைய வாகன உரிமையாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் நாட்டின் உணவு பாதுகாப்பு குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
என்ஜின் பாழாகிறது! E20 பெட்ரோல் குறித்து நாட்டின் முன்னணி கார் நிறுவனங்கள் அதிர்ச்சித் தகவல்
இந்தியாவில் 20% எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ள சூழலில், அதில் கலந்துள்ள மாசுகள் குறித்து நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களான மாருதி சுஸூகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு (SIAM) ரகசிய மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளன.
எத்தனால் கலந்த டீசல் பாதுகாப்பு சோதனையில் தோல்வியடைந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது
டீசலில் 20% எத்தனால் கலப்பதற்கான இந்திய அரசின் திட்டம் ஒரு பெரும் தடையை சந்தித்துள்ளது. இந்த முயற்சி பல பாதுகாப்புச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்படி செய்தால் E20 பெட்ரோல் போட்டால் கார் இன்ஜின் பழுதாகாது: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்
2016-க்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய பிஎஸ்-III (BS-III) வாகனங்களில் E20 பெட்ரோல் பயன்படுத்தும் போது, அவற்றின் சில ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கட்களை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும், ஆனால் இது வாகனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டைப் பாதிக்காது என்றும் மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.