Loading...
டெல்லியில் 'இந்தியா' கூட்டணியின் பேரணியால் ரூ. 12,000 கோடி வர்த்தகம் பாதிக்கும் என வணிகர்கள் எச்சரிக்கை
டெல்லியில் 'இந்தியா' கூட்டணியின் பேரணியால் ரூ. 12,000 கோடி வர்த்தகம் பாதிக்கும் அபாயம்

டெல்லியில் 'இந்தியா' கூட்டணியின் பேரணியால் ரூ. 12,000 கோடி வர்த்தகம் பாதிக்கும் என வணிகர்கள் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 01, 2026
06:29 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி ராம்லீலா மைதானத்தில் INDIA கூட்டணி நடத்தும் பிரம்மாண்டமான பேரணி மற்றும் பொதுக்கூட்டம் காரணமாக, தலைநகரின் வர்த்தக மையங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், சுமார் 2.5 லட்சம் கடைகள் மூடப்படும் அபாயம் நிலவுவதாகவும் டெல்லி வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர் சேம்பர் (CTI) எச்சரித்துள்ளது. பண்டிகைக் காலமான தீபாவளி மற்றும் தனத்திரயோதசி (Dhanteras) பண்டிகைகளுக்கு முன்னதாக நடைபெறும் இப்போராட்டத்தால் மத்திய மற்றும் பழைய டெல்லி பகுதிகளில் 80% வணிக நடவடிக்கைகள் ஸ்தம்பிக்கும் எனக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு

ரூ. 12,000 கோடி வணிகம் பாதிக்கும் அபாயம்

ராம்லீலா மைதானத்தை சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள சுமார் 3 லட்சம் கடைகளில், 2.5 லட்சம் கடைகள் வரை மூடப்படலாம் என சிடிஐ தலைவர் பிரிஜேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சாந்தினி சவுக் உள்ளிட்ட 20 முதன்மை சந்தைகளில் நாள்தோறும் நடைபெறும் ரூ. 10,000 கோடி முதல் ரூ. 12,000 கோடி வரையிலான வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இச்சந்தைகளை மட்டுமே நம்பியுள்ள 20 லட்சம் வணிகர்கள் மற்றும் 75 லட்சம் தொழிலாளர்களின் பண்டிகைக் கால வருவாய் கேள்விகுறியாகியுள்ளது.

போக்குவரத்து நெரிசல்

சரக்குப் போக்குவரத்து & போக்குவரத்து நெரிசல்

நரேலா, பவானா, ஓக்லா, மாயாபுரி உள்ளிட்ட 56 தொழில் பேட்டைகளில் இருந்து நாள்தோறும் டெல்லி சந்தைகளுக்கு வரும் சுமார் 5,000 சரக்கு லாரிகள் மற்றும் டெம்போக்களின் வருகை முடங்கியுள்ளது.

பண்டிகைக்கான பொருட்கள் கிடங்குகளிலேயே தேங்கியுள்ளதால் விநியோகச் சங்கிலி முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேரணிக்கு வருகை தரும் 15,000 முதல் 20,000 பேருந்துகள் மற்றும் வாகனங்களால் ஜே.எல்.என் மார்க், பகதூர் ஷா ஜாபர் மார்க் மற்றும் அஜ்மேரி கேட் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT