Loading...
பெட்ரோல் இல்லாமலேயே ஓடும் புதிய கார்கள்; 100% எத்தனால் E100 எரிபொருளுக்கு மத்திய அரசு அனுமதி
100% எத்தனால் E100 எரிபொருளுக்கு மத்திய அரசு அனுமதி

பெட்ரோல் இல்லாமலேயே ஓடும் புதிய கார்கள்; 100% எத்தனால் E100 எரிபொருளுக்கு மத்திய அரசு அனுமதி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 26, 2026
06:12 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் 100 சதவீதம் எத்தனால் எரிபொருளால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், 1989 ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகளில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திருத்தங்களை மேற்கொண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இ85 (E85) மற்றும் இ100 (E100) ஆகிய எத்தனால் எரிபொருட்களை பயன்படுத்தி இயங்கும் வாகனங்களுக்கான உமிழ்வு தரநிலைகள், எரிபொருள் விவரக்குறிப்புகள் மற்றும் பரிசோதனை நடைமுறைகள் சட்டப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்கள் இங்கே:-

பழைய பெட்ரோல் கார்கள்

பழைய பெட்ரோல் கார்களில் இ100 எரிபொருளைப் பயன்படுத்த முடியுமா?

சாதாரண பெட்ரோல் கார்களிலோ அல்லது இ20 (E20) வரை இயங்கக்கூடிய கார்களிலோ இ100 எரிபொருளைப் பயன்படுத்த முடியாது என அமைச்சகம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

20 சதவீதத்திற்கு மேற்பட்ட எத்தனால் கலந்த எரிபொருட்கள், அதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுச் சான்றளிக்கப்பட்ட நெகிழ்வு எரிபொருள் (Flex-Fuel) வாகனங்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக அனுமதிக்கப்படும்.

எனவே, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் கார்களின் எஞ்சின்களை மாற்றாமல் இ100 எரிபொருளைப் பயன்படுத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னேற்பாடு

வாகன உற்பத்தி நிறுவனங்களின் முன்னேற்பாடுகள் மற்றும் புதிய கார்கள்

அரசின் இப்புதிய அறிவிப்பைத் தொடர்ந்து, நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுஸூகி, டொயோட்டா, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் இ100 எரிபொருளில் இயங்கும் ஃப்ளெக்ஸ் ஃபுயல் மாடல்களை உருவாக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

ஏற்கனவே 2026 ஜூன் மாதத்தில் மாருதி சுஸூகி நிறுவனம் இ20 முதல் இ100 வரையிலான எத்தனால் கலவையில் இயங்கக்கூடிய வேகன் ஆர் ஃப்ளெக்ஸ் ஃபுயல் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

பொருளாதார நன்மைகள்

கச்சா எண்ணெய் இறக்குமதி குறைப்பு மற்றும் பொருளாதார நன்மைகள்

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை கணிசமாகக் குறைத்து, அந்நிய செலாவணியைப் பாதுகாப்பதே எத்தனால் கலப்புத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

நாட்டின் மொத்த எத்தனால் உற்பத்தித் திறன் தற்போது சுமார் 2,000 கோடி லிட்டர்களாக உயர்ந்துள்ளது.

E20 இலக்கை முன்கூட்டியே எட்டியுள்ள நிலையில், இ100 பயன்பாட்டிற்கு மாறுவது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாகனப் புகை உமிழ்வைக் குறைப்பதோடு, கரும்பு மற்றும் விவசாயக் கழிவுகளில் இருந்து எத்தனால் தயாரிக்கும் இந்திய விவசாயிகளின் வருமானத்தையும் கணிசமாக உயர்த்தும்.

ADVERTISEMENT