கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு ₹4,000: ரூ.603.34 கோடி சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு அரசாணை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, 2025-2026ஆம் ஆண்டின் அரவைப் பருவத்திற்கு சிறப்பு ஊக்கத் தொகையாக முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ.603.34 கோடி நிதியினை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத் தெரிவித்துள்ளார். கரும்பு விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின்படி, மத்திய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான விலையான(FRP) ரூ.3,290.50 உடன், மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.709.50 சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகள் கரும்பு விலையாக டன் ஒன்றிற்கு ரூ.4,000 பெறுவது முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 9.5%ற்கு மேல் சர்க்கரை கட்டுமானம் கொண்ட கரும்பிற்கு அதற்கேற்ப கூடுதல் தொகையும் கிடைக்கும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு 2025-2026 ஆம் ஆண்டின் அரவைப் பருவத்திற்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ 603.34 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது –
— TN DIPR (@TNDIPRNEWS) October 8, 2026
மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர்… pic.twitter.com/XTFcAFvTse
வரவு
தீபாவளி முதல் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு
தமிழ்நாட்டில் இயங்கி வரும் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை மற்றும் 15 தனியார் என மொத்தம் 29 சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு விநியோகித்த 90,000 விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவர்.
தகுதியுள்ள விவசாயிகளின் விவரங்கள் மாவட்ட அளவிலான குழுக்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடிப் பணப்பரிவர்த்தனை (DBT) மூலம் சிறப்பு ஊக்கத்தொகை அனுப்பும் பணிகள் எதிர்வரும் தீபாவளிப் பண்டிகை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.