Loading...
ஏற்றுமதியாளர்களுக்கு நிம்மதி! பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி வரிகளைக் குறைத்தது மத்திய அரசு
பெட்ரோல், டீசல் மற்றும் ஏடிஎஃப் ஏற்றுமதி வரி குறைப்பு

ஏற்றுமதியாளர்களுக்கு நிம்மதி! பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி வரிகளைக் குறைத்தது மத்திய அரசு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 17, 2026
08:04 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் மற்றும் ஏடிஎஃப் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரிகளைக் குறைத்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய கட்டணங்கள், அடுத்த இரு வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இரு வாரங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மறுபரிசீலனையின் அடிப்படையில் இந்த வரிக் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய வரி விகிதம்

மாற்றி அமைக்கப்பட்ட புதிய ஏற்றுமதி வரி விகிதங்களின் விவரங்கள்

புதிய அறிவிப்பின்படி, பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ₹1.5-ல் இருந்து ₹1 குறைத்து ₹0.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ₹25-ல் இருந்து ₹5 குறைக்கப்பட்டு ₹20 ஆகவும், விமான எரிபொருள் மீதான வரி லிட்டருக்கு ₹19-ல் இருந்து ₹4 குறைக்கப்பட்டு ₹15 ஆகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், டீசல் ஏற்றுமதி மீது முன்னர் விதிக்கப்பட்டிருந்த ₹1 உள்கட்டமைப்புத் தீர்வை தற்போது முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

பின்னணி

மேற்கு ஆசியப் பதற்றமும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளின் பின்னணியும்

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலவரங்கள் காரணமாக உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கவும், உள்நாட்டு விநியோகத்தை உறுதி செய்யவும் 2026 மார்ச் 27 முதல் இந்த ஏற்றுமதி வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த சிறப்பு கூடுதல் கலால் வரி உயர்த்தப்பட்டும் குறைக்கப்பட்டும் வருகிறது.

தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொடர்ந்து ஏற்றுமதியாளர்களுக்குச் சாதகமாக இந்த வரிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எரிபொருள் விலை

உள்நாட்டு எரிபொருள் விலையில் மாற்றமில்லை

இந்த ஏற்றுமதி வரிக் குறைப்பானது வெளிநாடுகளுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உள்நாட்டு கலால் வரியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

இதனால், நாட்டின் உள்ளூர் சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவித மாற்றமுமின்றி முந்தைய நிலையிலேயே தொடர்கின்றன.

ADVERTISEMENT