Loading...
லண்டனில் முதல்வரை பார்க்க குவிந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள்: பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி
முதலமைச்சர் விஜய் கலந்துகொள்ள இருந்த பொது நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது

லண்டனில் முதல்வரை பார்க்க குவிந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள்: பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சி

எழுதியவர் Venkatalakshmi V
Sep 16, 2026
08:40 am

செய்தி முன்னோட்டம்

லண்டனின் புகழ்பெற்ற 'தி ஷார்ட்' வானளாவிய கட்டடத்திற்கு அருகே தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் கலந்துகொள்ள இருந்த பொது நிகழ்ச்சி, பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி லண்டன் காவல்துறையினரால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. லண்டனுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சரை காண்பதற்காக, ஐக்கிய ராஜ்யத்தின் மிக உயரமான கட்டடமான 'தி ஷார்ட்' வளாகத்தின் வெளியே நூற்றுக்கணக்கான தமிழர்களும் ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். பல மணி நேரமாகக் காத்திருந்த ரசிகர்களுக்கு, நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

அறிவிப்பு

பாதுகாப்பு அச்சமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும்

கூட்டம் அளவுக்கு அதிகமாகத் திரண்டதால் ஏற்பட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, காவல்துறை அனுமதி வழங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சரின் குழுவைச் சேர்ந்த ஒருவர் ஒலிபெருக்கி மூலம் வெளியிட்ட அறிவிப்பில், "கூட்ட நெரிசல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, உரிய அனுமதி கிடைக்காததால் இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது" எனக் கூறினார்.

நீண்ட தூரம் பயணம் செய்து, நாள் முழுவதும் காத்திருந்த ஆதரவாளர்கள் பலர் இதனால் கவலையடைந்தனர்.

"பாதுகாப்புக் காரணங்களுக்காக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது நியாயமானதுதான் என்றாலும், நீண்ட நேரமாகக் காத்திருந்த எங்களுக்கு இது ஏமாற்றமாக உள்ளது. தமிழ்நாட்டில் கூடும் கூட்டத்துடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவான கூட்டம் தான்" என அங்கு காத்திருந்த ரசிகர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

லண்டன் பயணம்

முதலமைச்சரின் லண்டன் பயணம் & முதலீடுகள்

தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த முதலீட்டு ஈர்ப்பு பயணத்தின் மூலம் சுமார் ₹12,300 கோடி மதிப்பிலான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டில் உயர் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளில் 9,400-க்கும் மேற்பட்ட உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் விஜய் இன்று தாயகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT