Loading...
'வந்தே மாதரம்' பாடாவிட்டால் சிறையா? உச்சநீதிமன்றத்தில் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா வழக்கு
உச்சநீதிமன்றத்தில் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா வழக்கு

'வந்தே மாதரம்' பாடாவிட்டால் சிறையா? உச்சநீதிமன்றத்தில் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா வழக்கு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 22, 2026
03:44 pm

செய்தி முன்னோட்டம்

தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலை தடுத்து நிறுத்துபவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், "மதச் சுதந்திர உரிமையின் அடிப்படையில் மனசாட்சிப்படி செயல்படுபவர்கள் மீது எந்தவித குற்றவியல் தண்டனை நடவடிக்கையும் பாயாது" என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தில் 2026-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தை எதிர்த்துப் பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இச்சட்ட திருத்தத்தின்படி, 'வந்தே மாதரம்' பாடப்படுவதை தடுத்தாலோ அல்லது இடையூறு செய்தாலோ 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். இம்மனுவைச் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு விசாரித்து, மத்திய அரசுக்கு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

வாதங்கள்

மனுதாரரின் வாதங்கள்

டி.எம்.கிருஷ்ணா சார்பில் மூத்த வழக்கறிஞர் டாக்டர் எஸ்.முரளிதர் ஆஜராகி முன்வைத்த முதன்மை வாதங்கள்:

"வந்தே மாதரம் பாடலின் மொத்தம் உள்ள 6 சரணங்களில், கடைசி 4 சரணங்கள் துர்கை, லட்சுமி, சரஸ்வதி போன்ற பெண் தெய்வங்களைப் போற்றுவதாக அமைந்துள்ளன. குடிமக்களை இச்சரணங்களைப் பாடக் கட்டாயப்படுத்துவது அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிரானது; மேலும் அரசியலமைப்பு வழங்கும் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்குப் புறம்பானது".

"1937-இல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிலும், அரசியலமைப்பு நிர்ணய சபையிலும் இப்பாடலின் முதல் இரு சரணங்கள் மட்டுமே தேசியப் பாடலாகக் கொள்ளப்பட்டன.

கருத்து

உச்சநீதிமன்றத்தின் கருத்து மற்றும் மத்திய அரசின் நிலைப்பாடு

விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இம்மனுவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

எனினும், நீதிபதி பாக்சி பேசுகையில், "தேசியப் பாடல் எது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனநாயக அரசிற்கு உண்டு. அதில் இரு சரணங்களா அல்லது ஆறு சரணங்களா என்பதை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யாது. ஆனால், அரசியலமைப்புப் பிரிவு 25 மற்றும் 26-இன் கீழ் மத சுதந்திரப் பாதுகாப்பு கோரும் மனசாட்சியுள்ள நபர்கள் யாரும் இதற்காக குற்றவியல் நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட மாட்டார்கள்" எனக் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT