Loading...
மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 25-ல் முன் கூட்டியே சம்பளம்: 3 நாள் வங்கி வேலைநிறுத்தத்தை ஒட்டி உத்தரவு
மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 25-ல் முன் கூட்டியே சம்பளம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 25-ல் முன் கூட்டியே சம்பளம்: 3 நாள் வங்கி வேலைநிறுத்தத்தை ஒட்டி உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 24, 2026
02:12 pm

செய்தி முன்னோட்டம்

செப்டம்பர் 28 முதல் 30 வரை 3 நாட்கள் அகில இந்திய அளவிலான வங்கி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் முன்கூட்டியே செப்டம்பர் 25(வெள்ளிக்கிழமை) அன்று வழங்கப்படுமென மத்திய நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர்(CGA) வெளியிட்டுள்ள அலுவலகக் குறிப்பின்படி, பாதுகாப்புத் துறை, அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிற்துறை பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு செப்டம்பர் 25-ஆம் தேதியே தொகையை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முன்கூட்டிய வழங்கள் 'அட்வான்ஸ் பணமாக' கருதப்பட்டு, முழு தொகை கணக்கீட்டிற்கு பிறகான மாறுபாடுகள் ஏதேனும் இருப்பின், அவை அக்டோபர் மாத சம்பளத்தில் சரிசெய்யப்படும்.

வழிகாட்டுதல்

வங்கிகள் திறப்பும், வாடிக்கையாளர்களுக்கான வழிகாட்டுதலும்

வார இறுதி விடுமுறை நாட்களான செப்டம்பர் 26 மற்றும் 27-ஐத் தொடர்ந்து 3 நாட்கள் வேலைநிறுத்தம் வருவதால், தொடர்ச்சியாக 5 நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்தது.

இதனைத் தவிர்க்க, பொதுமக்களின் வசதிக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து பொதுத்துறை மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

நேரில் சென்று மேற்கொள்ள வேண்டிய அவசரப் பரிவர்த்தனைகளை செப்டம்பர் 27-க்குள் முடித்துக் கொள்ளவும், பிற பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ, இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் ஆப் சேவைகளை பயன்படுத்தவும் வங்கிகள் கோரியுள்ளன.

வேலைநிறுத்த நாட்களிலும் ஏடிஎம்களில் போதுமான ரொக்கப் பணம் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT