ரிலையன்ஸ்-பிபி நிறுவனங்களுக்குப் பெரும் நிம்மதி! ஆழ்கடல் இயற்கை எரிவாயு உச்ச வரம்பு விலையை உயர்த்தியது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிபி நிறுவனங்களின் கேஜி-டி6 போன்ற ஆழ்கடல் மற்றும் கடினமான இயற்கை எரிவாயு படுகைகளிலிருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவிற்கான உச்ச வரம்பு விலையை மத்திய அரசு அக்டோபர் 1 முதல் $9.89/MMBtu (ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்) ஆக உயர்த்தியுள்ளது. மத்திய பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு (PPAC) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த உயர்த்தப்பட்ட புதிய விலையானது 2026 அக்டோபர் 1 முதல் 2027 மார்ச் 31 வரையிலான 6 மாத காலத்திற்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
விதிகள்
வெவ்வேறு எரிவாயு புலன்களுக்கான உற்பத்தி மற்றும் விற்பனை விதிகள்
ஆழ்கடல், அதி-ஆழ்கடல் மற்றும் அதிக வெப்பநிலை கொண்ட கடினமான இயற்கை எரிவாயு படுகைகளுக்கு சந்தைப்படுத்துதல் மற்றும் விலை நிர்ணய சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அவை அரசின் உச்ச வரம்பு விலைக்குக் கட்டுப்பட்டவையாகும்.
அதேவேளையில், அரசுக்கு சொந்தமான ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்களின் பழமையான மரபுவழிப் களங்களிலிருந்து (Legacy fields) எடுக்கப்படும் ஏபிஎம் (APM) எரிவாயுவிற்கான உச்ச வரம்பு விலை உயர்த்தப்படாமல், முந்தைய $7/MMBtu என்ற அளவிலேயே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கிணறுகள்
புதிய கிணறுகளுக்கான கூடுதல் சலுகை மற்றும் விலை நிர்ணயப் பின்னணி
அரசு பொதுத்துறை நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா ஆகியவை தங்களது ஒதுக்கீட்டுப் புலன்களில் தோண்டும் புதிய கிணறுகளிலிருந்து கிடைக்கும் எரிவாயுவுக்கு, நடைமுறையில் உள்ள ஏபிஎம் விலையை விட 10 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அக்டோபர் மாதத்தில் புதிய கிணறுகளின் எரிவாயு விலை $7.70/MMBtu வரை விற்பனை செய்யப்படலாம்.
ஆழ்கடல் பகுதியில் அதிக முதலீடு செய்து எரிவாயு எடுக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், புதிய தொழில்நுட்பங்களை ஈர்க்கவுமே இந்த விலை உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சந்தை
தொழில்துறை தாக்கம் மற்றும் சந்தை நிலவரம்
உரத் தயாரிப்பு, மின் உற்பத்தி மற்றும் நகரங்களில் விநியோகிக்கப்படும் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி சமையல் எரிவாயு ஆகியவற்றிற்கு இயற்கை எரிவாயுவே முதன்மை மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
மரபுவழி களங்களின் எரிவாயு விலை $7 ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கான சிஎன்ஜி மற்றும் சமையல் எரிவாயு விலையில் பெரியளவில் மாற்றங்கள் இருக்காது.
ஆனால் கடினமான ஆழ்கடல் பகுதிகளில் எரிவாயு உற்பத்தி செய்து வரும் ரிலையன்ஸ் மற்றும் பிபி போன்ற நிறுவனங்களுக்கு இந்த விலை உயர்வு கூடுதல் வருவாயை அளிக்கும்.