Loading...
2030-க்குள் ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள்: இஸ்ரோவின் மாபெரும் லட்சியம் சாத்தியமா?
50 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதை மாபெரும் லட்சிய இலக்காகக் கொண்டுள்ளது ISRO

2030-க்குள் ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள்: இஸ்ரோவின் மாபெரும் லட்சியம் சாத்தியமா?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 21, 2026
04:55 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய விண்வெளி துறை வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதை மாபெரும் லட்சிய இலக்காகக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த இலக்கை எட்டுவதற்கு இந்தியா இன்னும் நீண்ட தூரமும் பல சவால்களையும் கடக்க வேண்டியுள்ளது. 2026-ஆம் ஆண்டில் இதுவரை இந்தியா மூன்று சுற்றுப்பாதை ஏவுதல்களை மட்டுமே மேற்கொண்டுள்ளது. இதில் இஸ்ரோ (ISRO) சார்பில் ஜனவரி 12 அன்று செலுத்தப்பட்ட PSLV-C62 ராக்கெட் மூன்றாவது கட்டத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தோல்வியடைந்தது. பின்னர், செப்டம்பர் 4 அன்று GSLV-F17 ராக்கெட் வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனுடன், தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் ஜூலை 18 அன்று 'விக்ரம்-I' ராக்கெட்டை வெற்றிகரமாகச் செலுத்தியது.

தேவைப்படும் மாபெரும் மாற்றம்

உள்கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை சவால்கள்

ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள் என்ற இலக்கை அடைய, ஒவ்வொரு பணிக்காக ஒரு ராக்கெட்டைத் தனித்தனியாக தயாரிக்கும் தற்போதைய முறையை மாற்ற வேண்டும்.

தயாரிப்பு, பரிசோதனை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய பல்வேறு நிலைகளில் ஒரே நேரத்தில் 10 முதல் 15 ராக்கெட்டுகள் தயாராக இருக்கும் வகையில் உற்பத்தி வேகத்தை உயர்த்த வேண்டும் எனத் துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஸ்ரீஹரிகோட்டாவில் தற்போது இரண்டு ஏவுதளங்கள் மட்டுமே உள்ளன.

ஏவுதல் திறனை அதிகரிக்க மூன்றாவது ஏவுதளத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதேவேளையில், எாிபொருள் விநியோகம், செயற்கைக்கோள் தளவாடங்கள் மற்றும் சோதனை வசதிகள் ஆகியவை தடையின்றி கிடைக்க வேண்டும்.

தனியார் நிறுவனங்களின் விண்வெளி நடவடிக்கைகளை முறைப்படுத்தும் 'IN-SPACe' அமைப்பின் அனுமதி வழங்கும் நடைமுறைகள் விரைவாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT