Loading...
வெள்ளிக்கிழமை வங்கி சேவைகள் பாதிப்பு! நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் 8 லட்சம் ஊழியர்கள்; கோரிக்கைகள் என்ன?
நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் 8 லட்சம் ஊழியர்கள்

வெள்ளிக்கிழமை வங்கி சேவைகள் பாதிப்பு! நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் 8 லட்சம் ஊழியர்கள்; கோரிக்கைகள் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Sep 11, 2026
05:36 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் இணைந்து செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) விடுத்த இந்த அழைப்பினால் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பொதுத்துறை வங்கி கிளைகளில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் கூற்றுப்படி, சுமார் எட்டு லட்சம் ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள் இதில் பங்கேற்றுத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

முக்கிய கோரிக்கை

வாரத்தில் 5 நாட்கள் வேலைத்திட்டம் முக்கியக் கோரிக்கை

வங்கி ஊழியர்களின் முதன்மையான கோரிக்கையாக வாரத்தில் ஐந்து நாட்கள் வேலைத்திட்டம் உடனே அமல்படுத்தப்பட வேண்டும் என்பது அமைந்துள்ளது.

தற்போது இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும் நிலையில், அனைத்து சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் கூடுதலாக 40 நிமிடங்கள் பணிபுரிய ஒப்புக்கொண்டு கடந்த 2024 மார்ச் மாத ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்பட்டும், மத்திய அரசு இதற்கு இன்னும் முறைப்படி ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.

எதிர்ப்பு

செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு எதிர்ப்பு

மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள தனிநபர் செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

வங்கியின் ஒட்டுமொத்த லாபத்தின் அடிப்படையில் அனைத்து ஊழியர்களுக்கும் பாகுபாடின்றி ஒரே சீரான ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

மேலும், நிலுவையில் உள்ள ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் நியாயமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

எச்சரிக்கை

தொடர் போராட்டங்கள் மற்றும் காலவரையற்ற வேலைநிறுத்த எச்சரிக்கை

மத்திய அரசு தங்களது நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் போராட்டங்களை தீவிரப்படுத்த போவதாக வங்கி தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

இதன் அடுத்தகட்டமாக செப்டம்பர் 28 முதல் 30 வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.

அதன்பிறகும் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாவிட்டால், வரும் அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT