Loading...
ரூ.2,000 மேலான UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? சாமானியர்களுக்கு பாதிப்பா?
₹2,000 வரை செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு எந்தவித MDR கட்டணமும் கிடையாது

ரூ.2,000 மேலான UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா? சாமானியர்களுக்கு பாதிப்பா?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 16, 2026
07:32 am

செய்தி முன்னோட்டம்

இந்திய தேசிய செலுத்துகை கழகம் (NPCI) வணிகர்களுக்கான UPI பரிவர்த்தனைகள் குறித்த புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, வணிகர்களுக்கு செய்யப்படும் ₹2,000-க்கு மேற்பட்ட UPI செலுத்துகைகளுக்கு 0.4% மர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட் (MDR) கட்டணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ₹2,000 வரை செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு எந்தவித MDR கட்டணமும் கிடையாது என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்த புதிய விரிவான நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

MDR கட்டணம்

MDR கட்டணம் என்றால் என்ன? நபருக்கு நபர் அனுப்புவதற்கு கட்டணமா?

MDR என்பது ஒரு வாடிக்கையாளர் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும்போது, அந்த பரிவர்த்தனையைச் செயல்படுத்தியதற்காக வணிகர்கள் வங்கிகளுக்கும் பேமெண்ட் செயலிகளுக்கும் செலுத்தும் சிறிய சேவைக் கட்டணமாகும்.

P2P (நபருக்கு நபர்) பரிவர்த்தனைகள்: நபர்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்றங்களுக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. பண அளவு எதுவாக இருந்தாலும் இது முற்றிலும் இலவசமாகும்.

P2M (வணிகர் செலுத்துகை): ₹2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே 0.4% MDR பொருந்தும்.

₹75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் மதிப்புப் பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்ச கட்டணமாக ₹300 மட்டுமே வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விலக்குகள்

துறை சார்ந்த விலக்குகள் மற்றும் சிறப்புக் கட்டணங்கள்

சிறு வணிகர்கள் மற்றும் குறிப்பிட்ட அத்தியாவசிய துறைகளுக்குப் புதிய விதிகளில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு மற்றும் எரிபொருள் போன்ற துறைகளில் ₹2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்குப் பிளாட் கட்டணமாக ரூ.5 மட்டுமே வசூலிக்கப்படும்.

பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிகள் சார்ந்த செலுத்துகைகளுக்கு 0.02% என்ற குறைந்தபட்ச MDR வசூலிக்கப்படும் (அதிகபட்ச வரம்பு ₹300).

QR கோடு மூலம் மாதம் ₹1 லட்சம் வரை வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு முழுமையாக பூஜ்ஜியம் (Zero) MDR நடைமுறை தொடரும்.

ADVERTISEMENT

பாதுகாப்புகள்

வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்புகள்

பொதுமக்கள் UPI சேவையை தொடர்ந்து எவ்வித கூடுதல் செலவுமின்றிப் பயன்படுத்துவதை உறுதி செய்ய மத்திய அரசு சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

பேமெண்ட் செயலிகள் வாடிக்கையாளர்களிடம் பிளாட்ஃபார்ம் கட்டணமோ மறைமுகக் கட்டணங்களோ வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வணிகர்கள் இந்த MDR கட்டணத்தை வாடிக்கையாளர்களின் பில்லில் கூடுதலாகச் சேர்க்கக்கூடாது என வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாதந்திர அளவிலோ அல்லது பரிவர்த்தனை எண்ணிக்கையிலோ எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி UPI-ஐ மக்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம்.

மொத்த வணிகப் பரிவர்த்தனைகளில் 96% பரிவர்த்தனைகள் ₹2,000-க்கு உள்ளாகவே நடப்பதால், இந்த புதிய கட்டண நடைமுறை வெறும் 4% பெரிய வணிகப் பரிவர்த்தனைகளை மட்டுமே பாதிக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT