Loading...
மத்திய அரசு அழுத்தத்தின் எதிரொலி: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காவல் துறையிடம் புகாரளிக்க ஒப்புக்கொண்ட மெட்டா நிறுவனம்
சட்ட அமலாக்கப் பிரிவினரிடம் அறிக்கையாக அளிக்க மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது

மத்திய அரசு அழுத்தத்தின் எதிரொலி: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காவல் துறையிடம் புகாரளிக்க ஒப்புக்கொண்ட மெட்டா நிறுவனம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 15, 2026
09:35 am

செய்தி முன்னோட்டம்

சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களை உடனடியாக உரிய காவல் துறை மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவினரிடம் அறிக்கையாக அளிக்க மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவில் சமூக வலைத்தளங்களை இயக்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பு என்பது "மிக முக்கியமான மற்றும் சமரசம் செய்ய முடியாத அடிப்படைக் கொள்கை" ன மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பின்னணி

சர்ச்சையின் பின்னணி

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் தளத்தில், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை(CSAM) விளம்பரப்படுத்தும் வகையில் சுமார் 30 கட்டண விளம்பரங்கள் வெளியானதாக பிபிசி புலனாய்வு அறிக்கை மூலம் அம்பலமானது.

இந்த விளம்பரங்கள் பயனர்களை டெலிகிராம் சேனல்களுக்குத் திசைதிருப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு, இத்தகைய விளம்பரங்களை உடனடியாக முடக்க உத்தரவிட்டதோடு, இதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து விரிவான விளக்கத்தையும் கோரியது.

நடவடிக்கை

குழந்தைகள் உரிமை ஆணையங்கள் தலையீடு

NCPCR அமைப்பு மெட்டா அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பி செப்டம்பர் 9 அன்று விசாரணை நடத்தியது.

மேலும் NHRC அமைப்பு, டெல்லி காவல்துறை மற்றும் MeitY அமைச்சகத்திடம் நடவடிக்கை அறிக்கை கோரியுள்ளது.

விளம்பரக் கொள்கைகள் மீறப்பட்டதை ஒப்புக்கொண்ட மெட்டா நிறுவனம், ஆனால் வேண்டுமென்றே இத்தகைய விளம்பரங்கள் பயனர்களுக்குக் காண்பிக்கப்படவில்லை எனக் மறுத்துள்ளது.

"குழந்தைகள் சுரண்டலுக்கு எதிராக எங்களது நிறுவனம் 'பூஜ்ய சகிப்புத்தன்மை' கொள்கையைக் கொண்டுள்ளது. சர்ச்சைக்குரிய விளம்பரங்கள், கணக்குகள் மற்றும் URL-கள் உடனடியாக நீக்கப்பட்டுள்ளன."

மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்துத் தெரிவித்துள்ள அரசு வட்டாரங்கள், மெட்டாவின் இந்த ஒப்புதல் ஒரு முதல் படி மட்டுமே என்றும், பிற சமூக வலைத்தளங்களும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை முன்னெச்சரிக்கையாக உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளன.

ADVERTISEMENT