Loading...
ஓஎஸ்எம் சர்ச்சைக்குப் பின் அதிரடி மாற்றம்! சிபிஎஸ்இ புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி மன்தீப் பண்டாரி நியமனம்
சிபிஎஸ்இ புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி மன்தீப் பண்டாரி நியமனம்

ஓஎஸ்எம் சர்ச்சைக்குப் பின் அதிரடி மாற்றம்! சிபிஎஸ்இ புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி மன்தீப் பண்டாரி நியமனம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 26, 2026
06:20 am

செய்தி முன்னோட்டம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி மன்தீப் சிங் பண்டாரி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக தலைவராகப் பொறுப்பேற்ற லோகண்டே பிரசாந்த் சீதாராமனுக்கு பதிலாக இவர் தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார். ஓஎஸ்எம் விடைத்தாள் மதிப்பீட்டு முறை தொடர்பான சர்ச்சைகளும் மற்றும் மறு மதிப்பீட்டுக் கோளாறுகளும் எழுந்த சில மாதங்களிலேயே மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பில் இந்த அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனுபவ பின்னணி

புதிய தலைவர் மன்தீப் பண்டாரியின் அரசுப் பணி அனுபவ பின்னணி

1974 ஆம் ஆண்டு டிசம்பர் 14 அன்று பிறந்த மன்தீப் பண்டாரி, 2001 ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

இவர் 2023 மார்ச் முதல் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரின் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார்.

முன்னதாக இணை செயலாளர், ஆளுநரின் கூடுதல் தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உட்பட பல முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை திறம்பட வகித்துள்ளார்.

தகுதி உயர்வு

மத்திய பணியாளர் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ உத்தரவு மற்றும் தகுதி உயர்வு

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட உத்தரவின்படி, மன்தீப் பண்டாரி சிபிஎஸ்இ தலைவராகக் கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் தற்காலிகமாக பதவி உயர்த்தப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 25 தேதியிட்ட அமைச்சரவையின் நியமனக் குழுவின் ஒப்புதலின்படி பல மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் இடமாற்றப் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

டிஜிட்டல் மதிப்பீட்டு முறையின் பாதுகாப்பு மற்றும் நடைமுறை சிக்கல்கள் தொடர்பாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நியமனம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

ADVERTISEMENT

பொதுத்தேர்வு அட்டவணை

2027 பொதுத்தேர்வு அட்டவணை மற்றும் மாதிரி வினாத்தாள்கள் வெளியீடு

இம்மாற்றங்களுக்கு இடையே, 2027 ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் cbseacademic.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவற்றை எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான அதிகாரப்பூர்வத் தேர்வு அட்டவணை மிக விரைவில் cbse.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து அச்சடித்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT