Loading...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

4,000 அக்னிவீரர்களின் ரகசிய தகவல்களை திருடி டார்க் வெப்பில் விற்க முயற்சி: ஹரியானாவை சேர்ந்த 14 வயது சிறுவன் கைது

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகாலப் பணிக்காகத் தேர்வு செய்யப்படும் அக்னிவீர் வீரர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி, அதனை இணையத்தின் இருண்ட உலகமான டார்க் வெப்பில் விற்பனை செய்ய முயன்ற ஹரியானா மாநிலம் வல்லப்கர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு பிடித்து விசாரணை நடத்தியுள்ளது.

பீகாரில் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நிதிஷ் சேது பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

பீகார் மாநிலத்தில் கங்கை நதியின் குறுக்கே 14 ஆண்டுகாலக் கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்டுள்ள 9.76 கிலோமீட்டர் நீளமுள்ள பிரம்மாண்ட நிதிஷ் சேது ஆறு வழிப் பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையான இன்று (நவ. 21) நாட்டுக்கு அர்ப்பணித்துத் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான நெடுஞ்சாலை பெருந்திட்டத்தை தயாரிக்க தமிழக அரசு டெண்டர் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சியைத் திட்டமிடும் வகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பெருந்திட்டம் 2036-ஐ (Master Plan) தயாரிப்பதற்கான ஆலோசகர்களைத் தேர்வு செய்யத் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் (TANSHA) அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரியுள்ளது.

நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் திருமணம்: தகுந்த சட்டம் இயற்றப் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் நடைபெறும் திருமணங்களைக் கட்டுப்படுத்த தகுந்த சட்டம் இயற்றுவது குறித்துப் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

21 Nov 2026
• தமிழ்நாடு

2026-ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை ஜனவரி 31-க்குள் நிறுவனங்கள் செலுத்த அறிவுறுத்தல்: நல வாரியம் அறிவிப்பு

தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் தேதிக்குள் தவறாமல் செலுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

21 Nov 2026
• விஜய்

மீனவ பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்; உலக மீனவர் தினத்தில் முதலமைச்சர் விஜய் வாழ்த்து

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும் இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு அயராது உழைக்கும் மீனவப் பெருமக்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அமைச்சர் டெல்லி வருகைக்கு இடையே சிந்து நதி நீர் ஒப்பந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என இந்தியா திட்டவட்டம்

புதுடெல்லியில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாகரிகங்கள் உரையாடல் மன்றத்தில் பங்கேற்க பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் இந்தியா வந்துள்ளார்.

21 Nov 2026
• மணிப்பூர்

மணிப்பூரில் கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் உயிரிழப்பு; 180 பேர் மருத்துவமனையில் அனுமதி

மணிப்பூர் மாநிலத்தின் சந்தேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் கடந்த மூன்று நாட்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம்: புதுச்சேரி எஸ்பி சுப்பிரமணியன் டிஸ்மிஸ்

பெண் காவலருக்குப் பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) சுப்பிரமணியன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

21 Nov 2026
• சபரிமலை

சபரிமலை பக்தர்களுக்கு ₹2 லட்சம் இலவச ஆயுள் காப்பீடு: வீடு திரும்பிய 3 நாட்களுக்குள் உயிரிழந்தாலும் இழப்பீடு கிடைக்கும்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முதன்முறையாக ₹2 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும் எனத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

21 Nov 2026
• தேர்வு

ஜேஇஇ மெயின் 2027: ஜனவரி அமர்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்; கவனத்தில் கொள்ளவேண்டியவை

ஜேஇஇ மெயின் 2027 ஜனவரி அமர்வுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளை நவம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

கலாச்சார இணைப்பே உலக அமைதிக்கு உத்தரவாதம்: முதலாவது SCO நாகரிகங்கள் உரையாடல் மன்றத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லியில் உள்ள சிறப்புமிக்க புரானா கிலாவில் முதலாவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நாகரிகங்கள் உரையாடல் மன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

டிரம்ப், ஜி ஜின்பிங், புதின் முத்தரப்பு சந்திப்பு: பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்திக்கு பாஜக பதிலடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு சந்திப்பு குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

20 Nov 2026
• இந்தியா

குனோ தேசிய பூங்காவில் போட்ஸ்வானா சிறுத்தை 4 குட்டிகளை ஈன்றது: இந்தியாவில் சிறுத்தைகள் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

இந்தியாவின் சிறுத்தை பாதுகாப்புத் திட்டம் மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி வந்த பாகிஸ்தான் அமைச்சர் தலைமையிலான குழு: SCO மாநாடும் பின்னணி சர்ச்சைகளும்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் உயர்மட்டக் குழு இன்று புதுடெல்லி வந்தடைந்துள்ளது.

20 Nov 2026
• சென்னை

தங்கத்தில் ரீனியம் வேதிப்பொருள் கலப்பா? வைரல் வீடியோ வதந்திக்கு சென்னை நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் விளக்கம்

தங்கத்தில் ரீனியம் என்ற வேதிப்பொருள் கலப்படம் செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் நவம்பர் 24-ல் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் சாலை, குடிநீர், பள்ளி உள்கட்டமைப்பு பணிகளுக்கு ₹1,019.61 கோடி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.

கார்த்திகை தீப நாளான நவம்பர் 24-ல் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வரும் நவம்பர் 23 ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்ரி தேவி 91 வயதில் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்ரி தேவி வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 91 ஆகும்.

விதிகளை மீறி பணி நியமன ஒப்புதல்; பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

அரசின் விதிகளை மீறி ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு நியமன ஒப்புதல் வழங்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

20 Nov 2026
• காவேரி

காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றத்தில் பின்னடைவு: கர்நாடகத்திடம் கூடுதலாக தண்ணீர் கோரிய மனு தள்ளுபடி

நீண்டகாலமாக நீடித்து வரும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாக, கர்நாடகத்திடமிருந்து கூடுதலாக 11 டி.எம்.சி. (TMC) காவிரி தண்ணீரைத் திறந்துவிட உத்தரவிட கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

20 Nov 2026
• தமிழகம்

தமிழ்நாடு கனிம வள மேம்பாட்டுக் கழகம் (TNMRDC) என புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்; முழு விவரம்

தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை முறையாக மேம்படுத்தவும், பயன்படுத்தவும் தமிழ்நாடு கனிம வள மேம்பாட்டுக் கழகம் (TNMRDC) என்ற புதிய அரசு பொதுத்துறை நிறுவனத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

20 Nov 2026
• திமுக

கல்குவாரி விதிமீறல் வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தி வீடுகளில் போலீசார் சோதனை

கல்குவாரிகளில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் மற்றும் கற்களை வெட்டி எடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தியின் மதுரை வீடுகளில் போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

20 Nov 2026
• சென்னை

கொளத்தூர் MLA வி.எஸ். பாபு உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி: இன்று மாலை திரு.வி.க. நகரில் இறுதிச்சடங்கு

உடல்நலக்குறைவால் காலமான சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடலுக்கு, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

'அக்வான்' தீவிர புயல் இன்று கரையைக் கடக்கிறது: ஒடிசாவில் 1 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் தீவிர புயல், ஆந்திராவின் நரசாபுரம் முதல் ஒடிசாவின் புரி வரையிலான கடலோரப் பகுதியில் இன்று கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

20 Nov 2026
• தவெக

கொளத்தூர் MLA பாபு மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகள் காலி; தவெக பலம் 108 ஆகக் குறைந்தது

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு நேற்று உடல்நலக் குறைவால் காலமானதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

20 Nov 2026
• தமிழகம்

நாளை (நவம்பர் 21) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு விபரம்

தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளை தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தவெகவின் கொளத்தூர் தொகுதி MLA வி.எஸ்.பாபு காலமானார்

தமிழக வெற்றி கழகத்தின் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு இன்று காலமானார்.

தமிழக முதலீட்டு ரகசியங்களை ஆந்திராவிற்கு கசியவிட்ட 15 பேர் பணிநீக்கம்; ஆந்திர அரசு பணியில் இணைந்த மூவரால் சர்ச்சை

தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் சமீபகாலமாக ஆந்திர மாநிலத்திற்கு செல்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழக அரசின் முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு முகமையில் (Guidance Tamil Nadu) பணியாற்றிய 15 பேர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் திடீர் அனுமதி

தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

19 Nov 2026
• பருவமழை

நவம்பர் 23 முதல் மீண்டும் மழை: சென்னை, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு மகிழ்ச்சி செய்தி அளித்த தமிழ்நாடு வெதர்மேன்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்குப் பிறகு அதாவது வரும் நவம்பர் 23-ஆம் தேதி முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் அடுத்தகட்ட மழைப்பொழிவு தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

19 Nov 2026
• மின்தடை

நாளை (நவம்பர் 20) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு விபரம்

தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளை தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மாற்றம்: மருத்துவமனையில் 112 இலவச சிகிச்சைகள் வரை செய்துகொள்ளலாம்

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிசேரியன் பிரசவம், கருக்கலைப்பு, சிறுநீரகக் கல் மற்றும் மலேரியா உள்ளிட்ட 112 மருத்துவ சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இலவசமாக பெறும் வகையில் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

18 Nov 2026
• தமிழகம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

'அக்வான்' புயலின் நகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாகவும், வரும் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காசி தமிழ் சங்கமம் 5.0: கன்னியாகுமரி - பனாரஸ் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழ்நாட்டிற்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசி (வாரணாசி) நகரத்திற்கும் இடையிலான பழமையான கலாச்சார மற்றும் நாகரிகப் பிணைப்பை வலுப்படுத்தும் வகையில், மத்திய அரசு சார்பில் 'காசி தமிழ் சங்கமம் 5.0' விழா வரும் நவம்பர் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 12-ஆம் தேதி வரை விமர்சையாக நடைபெறவுள்ளது.

18 Nov 2026
• சென்னை

தனியார் நிறுவனங்களையும் குறிவைக்கும் சைபர் கும்பல்: சென்னையில் 55 நிமிடங்களில் ரூ.1.03 கோடி மோசடி

சென்னை பெருங்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து, வெறும் 55 நிமிடங்களில் 24 முறை சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனை செய்து ரூ. 1 கோடியே 3 லட்சத்து 76 ஆயிரத்து 860-ஐ சைபர் மோசடி கும்பல் அபகரித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18 Nov 2026
• மதுரை

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைக் கூண்டோடு பிடிக்க உதவிய சாமானிய மக்களின் துணிச்சலான பங்களிப்பு

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான பெருங்கொள்ளை வழக்கில், முக்கிய குற்றவாளியான நிஷாந்த் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்வதற்கு சாமானிய மக்களின் விழிப்புணர்வும், சரியான நேரத்தில் அவர்கள் வழங்கிய தகவல்களுமே மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

18 Nov 2026
• காவல்துறை

காவல் நிலையத்திற்கு இனி அலைய தேவையில்லை: இணையதளம் வழியாக CSR ரசீது பெறும் புதிய சேவை இன்று அறிமுகம்

பொதுமக்கள் இனி காவல் நிலையங்களுக்கு நேரில் செல்லாமலேயே, இணையதளம் வாயிலாகத் தங்களது புகார்களைப் பதிவு செய்து அதற்கான e-CSR ஒப்புகை ரசீதை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளும் புதிய டிஜிட்டல் சேவை இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

18 Nov 2026
• மின்தடை

பவர் கட் அலர்ட்! நாளை (நவம்பர் 19) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு விபரம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.