Loading...
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்ரி தேவி 91 வயதில் காலமானார்: தலைவர்கள் இரங்கல்
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்ரி தேவி 91 வயதில் காலமானார்

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்ரி தேவி 91 வயதில் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 20, 2026
02:36 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்ரி தேவி வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 91 ஆகும். உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பஞ்சூர் கிராமத்தில் இன்று காலை 11 மணியளவில் அவர் உயிரிழந்தார். நீண்ட நாட்களாக வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைவால் அவர் அவதிப்பட்டு வந்தார். இவரது மறைவு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குடும்பத்தினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாளை சனிக்கிழமை ஹரித்துவாரில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

தலைவர்கள் இரங்கல்

மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்

சாவித்ரி தேவியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவிட்டுள்ளார்.

ஒரு தாயின் இழப்பு என்பது வாழ்க்கையில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் துயரமான நேரத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பலம் கிடைக்கப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் மறைந்த ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதாகவும் பங்கஜ் சவுத்ரி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

உத்தரகாண்ட் முதல்வர்

தாயின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உருக்கம்

உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியும் சாவித்ரி தேவியின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

தாயின் அன்பும் ஆசீர்வாதமும் வாழ்க்கையின் மிக விலையுயர்ந்த பொக்கிஷங்கள் என்று அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.

சாவித்ரி தேவியின் மறைவு அவரது குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு எனத் தாமி குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த ஆன்மாவிற்கு பாபா கேதார்நாத் திருவடியில் இடம் கிடைக்கப் பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் யோகி ஆதித்யநாத் குடும்பத்தினர் இந்தத் துயரத்தைத் தாங்கும் சக்தியைப் பெற வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

ADVERTISEMENT

ஹரித்துவார்

ஹரித்துவாரில் நாளை நடைபெற உள்ள இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்ட நிர்வாகம் சாவித்ரி தேவியின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது தாயாரின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க உத்தரகாண்ட் செல்ல உள்ளார்.

முன்னதாக கடந்த 2024 ஜூன் மாதம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தாயாரை அவர் நேரில் சந்தித்திருந்தார்.

நாளை ஹரித்துவாரில் நடைபெற உள்ள இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் யோகி ஆதித்யநாத்திற்கு தங்களது ஆறுதலைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT