தவெகவின் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபு பாபு காலமானார்
எழுதியவர்
Venkatalakshmi V
Nov 19, 2026
03:27 pm
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றி கழகத்தின் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு இன்று காலமானார். கடந்த 70 நாள்களுக்கும் மேலாக சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள MGM மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று நண்பகல் மாரடைப்பால் காலமானார். முன்னதாக மருத்துவமனையை சுற்றி தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் செய்தி அறிக்கை வெளியாகும் முன்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனன் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2026 சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் பாபு, திமுகவின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை தோற்கடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்!#SunNews | #TVK | #VSBabu
— Sun News (@sunnewstamil) November 19, 2026