Loading...
கலாச்சார இணைப்பே உலக அமைதிக்கு உத்தரவாதம்: முதலாவது SCO நாகரிகங்கள் உரையாடல் மன்றத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு
முதலாவது SCO நாகரிகங்கள் உரையாடல் மன்றத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

கலாச்சார இணைப்பே உலக அமைதிக்கு உத்தரவாதம்: முதலாவது SCO நாகரிகங்கள் உரையாடல் மன்றத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 21, 2026
07:43 am

செய்தி முன்னோட்டம்

புதுடெல்லியில் உள்ள சிறப்புமிக்க புரானா கிலாவில் முதலாவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) நாகரிகங்கள் உரையாடல் மன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் போர் மற்றும் அமைதியின்மை குறித்த விவாதங்கள் மேலோங்கியுள்ள சூழலில் இந்த உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது என்றார். கலாச்சார இணைப்பே உலக அமைதிக்கான மிக வலுவான உத்தரவாதமாகத் திகழ்கிறது எனப் பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார். 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த அமைப்பில் கலாச்சார ஒத்துழைப்பு உறுப்பு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

டிஜிட்டல் மயமாக்க அழைப்பு

இலக்கியங்களை ஏஐ மூலம் மொழிபெயர்க்கவும் பழங்காலச் சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கவும் அழைப்பு

உறுப்பு நாடுகளின் இலக்கியம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பரந்த அளவிலான மக்களிடம் கொண்டு சேர்க்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

குறிப்பிட்ட சில மொழிகளில் மட்டுமே உள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் விரைவாக மொழிபெயர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கையெழுத்து பிரதிகள் மற்றும் வரலாற்று ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்றார்.

இதன் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ள இளைஞர்களும் பிற நாடுகளின் கலாச்சார பாரம்பரியத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

சுற்றுலா வழித்தடங்கள்

பட்டுப்பாதை மற்றும் பௌத்த பாரம்பரியத் தலங்களை இணைக்கும் சுற்றுலா வழித்தடங்கள் முன்மொழிவு

கலாச்சார சுற்றுலாத் துறையில் உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள மிகப்பெரிய ஒத்துழைப்பு வாய்ப்புகளைப் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

உறுப்பு நாடுகளில் அமைந்துள்ள பட்டுப்பாதை மற்றும் பௌத்த பாரம்பரியத் தலங்களை இணைக்கும் வகையில் பாரம்பரியச் சுற்றுலா வழித்தடங்களை உருவாக்க வேண்டும் என்றார்.

அத்துடன் அருங்காட்சியகங்களின் கூட்டுக் கண்காட்சிகள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கலைஞர்களின் பரிமாற்றத் திட்டங்களையும் பிரதமர் முன்மொழிந்தார்.

இதன் மூலம் நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுத் தொடர்புகளை மக்கள் நேரில் அறிந்து கொள்ள வழிவகை ஏற்படும் என அவர் கூறினார்.

ADVERTISEMENT

மகாபாரதம்

மகாபாரத கால வரலாறு கொண்ட புரானா கிலாவின் பாரம்பரியமும் கலை நிகழ்ச்சிகளும்

மகாபாரதக் காலத்தோடு தொடர்புடைய பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்ட புரானா கிலாவில் இம்மாநாடு நடைபெறுவது சிறப்பானது என பிரதமர் குறிப்பிட்டார்.

இக்கோட்டையின் வரலாறு அதனுடன் தொடர்புடைய புராணக் கதைகளைப் போலவே மிகவும் சுவாரசியமானது என அவர் பாராட்டினார்.

தொடக்க விழாவில் நிகழ்த்தப்பட்ட வேத மந்திரங்கள், பௌத்த தத்துவக் காட்சிகள் மற்றும் அனுமனின் பயணத்தை சித்தரிக்கும் கலை நிகழ்ச்சிகளை அவர் நினைவுகூர்ந்தார்.

இந்த நிகழ்ச்சிகள் இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதோடு மனிதகுலத்திற்கான அன்பு மற்றும் ஒற்றுமையின் செய்தியை உலகிற்கு வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

ADVERTISEMENT