Loading...
2026-ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை ஜனவரி 31-க்குள் நிறுவனங்கள் செலுத்த அறிவுறுத்தல்: நல வாரியம் அறிவிப்பு
ஜனவரி 31-க்குள் தொழிலாளர் நல நிதியை நிறுவனங்கள் செலுத்த வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

2026-ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை ஜனவரி 31-க்குள் நிறுவனங்கள் செலுத்த அறிவுறுத்தல்: நல வாரியம் அறிவிப்பு

எழுதியவர் Vasuki
Nov 21, 2026
12:21 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் தேதிக்குள் தவறாமல் செலுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக இந்தத் தொகை வசூலிக்கப்படுகிறது. அதன்படி, தொழிலாளர் பங்களிப்பாக ரூ.20 மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக ரூ.40 என ஒவ்வொரு தொழிலாளிக்கும் மொத்தம் ரூ.60 வீதம் கணக்கிட்டு வாரியத்திற்குச் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் கடைசி தேதி

2026-2027 கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளைகள் பயன்பெறும் வகையில், 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை, கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாடநூல் உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான படிவங்களைத் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் www.lwb.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை, உரிய சான்றிதழ்களுடன் இணைத்து அடுத்த மாதம் அதாவது வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை 'செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-06' என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பி வைக்குமாறு தொழிலாளர் நல வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT