சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் திடீர் அனுமதி
செய்தி முன்னோட்டம்
தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.வி. அர்லேகர், அங்கு 2 நாட்கள் தங்கி சிகிச்சை பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆளுநருடன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து அவரைக் கவனித்து வருகின்றனர். ஆளுநர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் உடல்நல காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனிடையே மருத்துவமனையில் ஆளுநரை இன்று மாலை முதலைமைச்சர் விஜய் நேரில் சென்று நலம் விசாரிக்க போவதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Breaking News | ஆளுநரிடம் நலம் விசாரிக்கிறார் முதல்வர் விஜய் | CM Vijay Meet Governor Arlekar | News18 Tamil Nadu
— News18 Tamil Nadu (@News18TamilNadu) November 19, 2026
#BreakingNews #CMVijay #GovernorArlekar #News18TamilNadu #TamilNews pic.twitter.com/99u5VhoJHh