Loading...
நவம்பர் 23 முதல் மீண்டும் மழை: சென்னை, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு மகிழ்ச்சி செய்தி அளித்த தமிழ்நாடு வெதர்மேன்
தமிழகத்தில் அடுத்தகட்ட மழைப்பொழிவு தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது

நவம்பர் 23 முதல் மீண்டும் மழை: சென்னை, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு மகிழ்ச்சி செய்தி அளித்த தமிழ்நாடு வெதர்மேன்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 19, 2026
11:48 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், அடுத்த நான்கு நாட்களுக்குப் பிறகு அதாவது வரும் நவம்பர் 23-ஆம் தேதி முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் அடுத்தகட்ட மழைப்பொழிவு தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வானிலை அறிக்கை

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள முன்னறிவிப்புகளின்படி, தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் 23-ஆம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களில் பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற நல்ல மழை கிடைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது.

இது விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நவம்பர் 23 முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT