Loading...
தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான நெடுஞ்சாலை பெருந்திட்டத்தை தயாரிக்க தமிழக அரசு டெண்டர் அறிவிப்பு
10 ஆண்டுகளுக்கான நெடுஞ்சாலை பெருந்திட்டத்தைத் தயாரிக்க மாநில நெடுஞ்சாலை ஆணையம் டெண்டர் கோரியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான நெடுஞ்சாலை பெருந்திட்டத்தை தயாரிக்க தமிழக அரசு டெண்டர் அறிவிப்பு

எழுதியவர் Vasuki
Nov 21, 2026
04:16 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான சாலை உள்கட்டமைப்பு வளர்ச்சியைத் திட்டமிடும் வகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பெருந்திட்டம் 2036-ஐ (Master Plan) தயாரிப்பதற்கான ஆலோசகர்களைத் தேர்வு செய்யத் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் (TANSHA) அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரியுள்ளது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்த லட்சியத் திட்டங்களின் ஆரம்பகட்டப் பணிகள் இதன் மூலம் தொடங்கியுள்ளன. வெற்றித் தமிழகம் தொலைநோக்குப் பார்வையின் கீழ், 2036-ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கிற்கு வலுசேர்க்கும் விதமாக, மாநிலத்தின் 10 ஆண்டுகால சாலைத் தேவைகள் மற்றும் மேம்பாட்டு முன்னுரிமைகளைக் கண்டறிய இந்த மாஸ்டர் பிளான் உருவாக்கப்படவுள்ளது.

சாத்தியக்கூறு ஆய்வு

சென்னை - கோவை - தூத்துக்குடி வழித்தட விரைவு சாலை சாத்தியக்கூறு ஆய்வு

இரண்டாவது முக்கியத் திட்டமாக, தமிழகத்தின் முக்கியத் தொழில் மற்றும் முதலீட்டு மையங்களான சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியை இணைக்கும் உத்தேசத் தொழில் வழித்தட விரைவுச் சாலைக்கான தொழில்நுட்ப-பொருளாதாரச் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளவும் ஆலோசகர் நியமிக்கப்பட உள்ளார்.

ரூ.5 கோடி ஆரம்பகட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு, துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மையங்களை இணைத்துப் பயண நேரத்தையும் சரக்குச் செலவுகளையும் குறைக்க உதவும்.

மேலும், நில உரிமையாளர்களுக்கு ஏற்படும் இழப்புகளைக் குறைக்கும் வகையில் மக்கள் நலன் சார்ந்த புதிய நிலம் கையகப்படுத்தும் முறைகளும் ஆராயப்பட உள்ளன.

டிசம்பர் 23 கடைசி நாள்

நவம்பர் 23 முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

மாநில நெடுஞ்சாலை ஆணையத்தின் கண்காணிப்புப் பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த இரண்டு திட்டங்களுக்கான டெண்டர் விவரங்கள் வரும் நவம்பர் 23-ஆம் தேதி மாலை 4 மணி முதல் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tntenders.gov.in என்ற முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

தகுதியான ஆலோசனை நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாகத் தங்களது ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிக்க வரும் டிசம்பர் 23-ஆம் தேதி பிற்பகல் 3 மணி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெண்டர் தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் மற்றும் திருத்தங்கள் அனைத்தும் அரசு இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT