Loading...
குனோ தேசிய பூங்காவில் போட்ஸ்வானா சிறுத்தை 4 குட்டிகளை ஈன்றது: இந்தியாவில் சிறுத்தைகள் எண்ணிக்கை 62 ஆக உயர்வு
குனோ தேசிய பூங்காவில் போட்ஸ்வானா சிறுத்தை 4 குட்டிகளை ஈன்றது

குனோ தேசிய பூங்காவில் போட்ஸ்வானா சிறுத்தை 4 குட்டிகளை ஈன்றது: இந்தியாவில் சிறுத்தைகள் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 20, 2026
06:53 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் சிறுத்தை பாதுகாப்புத் திட்டம் மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. போட்ஸ்வானாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பெண் சிறுத்தை திறந்தவெளி வனப்பகுதியில் நான்கு ஆரோக்கியமான குட்டிகளை ஈன்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் இன்று இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இரண்டரை வயதான KOMG 3 என்ற பெண் சிறுத்தையே இந்தியாவில் குட்டிகளை ஈன்ற முதல் போட்ஸ்வானா சிறுத்தையாகும்.

திறந்தவெளி பிரசவம்

நான்கு மாத வன வாழ்க்கைக்குப் பிறகு நிகழ்ந்த இரண்டாவது திறந்தவெளி பிரசவம்

திறந்தவெளி வனப்பகுதியில் நான்கு மாதங்களுக்கும் மேலாக வாழ்ந்த பிறகு இயற்கையான சூழலில் இக்குட்டிகள் பிறந்துள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு புராஜெக்ட் சீட்டா தொடங்கப்பட்டதிலிருந்து திறந்தவெளி வனத்தில் சிறுத்தை குட்டிகளை ஈன்ற இரண்டாவது நிகழ்வு இதுவாகும்.

முன்னதாக கடந்த ஏப்ரல் 11 அன்று குனோ தேசிய பூங்காவில் KGP12 என்ற பெண் சிறுத்தை நான்கு குட்டிகளை ஈன்றிருந்தது.

இந்தியாவில் பிறந்த இரண்டாம் தலைமுறை சிறுத்தை ஒன்று திறந்தவெளி வனத்தில் இனப்பெருக்கம் செய்த முதல் வரலாற்று நிகழ்வாக அது அமைந்தது.

43 சிறுத்தைகள்

மொத்தமுள்ள 62 சிறுத்தைகளில் 43 சிறுத்தைகள் இந்திய மண்ணிலேயே பிறந்தவை

புதிதாகப் பிறந்துள்ள நான்கு குட்டிகளுடன் சேர்த்து இந்தியாவின் மொத்த சிறுத்தைகள் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 43 சிறுத்தைகள் இந்தியாவிலேயே பிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டில் பிறக்கும் சிறுத்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது இத்திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய சான்றாகப் பார்க்கப்படுகிறது.

இயற்கையான வனச் சூழலில் சிறுத்தைகள் தங்களைத் தகவமைத்துக் கொண்டு இனப்பெருக்கம் செய்யும் திறன் பெற்றுள்ளதை இது உறுதிப்படுத்துகிறது.

ADVERTISEMENT

புராஜெக்ட் சீட்டா

1952-ல் அழிந்த சிறுத்தைகளை மீட்டெடுக்கும் புராஜெக்ட் சீட்டா திட்டத்தின் வளர்ச்சி

இந்தியாவில் 1952-ஆம் ஆண்டு அழிந்து போனதாக அறிவிக்கப்பட்ட சிறுத்தைகளை மீண்டும் கொண்டு வர 2022 செப்டம்பர் 17 அன்று புராஜெக்ட் சீட்டா தொடங்கப்பட்டது.

உலகின் முதல் கண்டம் விட்டுக் கண்டம் மாற்றும் திட்டமாக நமீபியாவிலிருந்து எட்டு சிறுத்தைகள் முதலில் கொண்டு வரப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 2023 பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகளும், 2026-ல் போட்ஸ்வானாவிலிருந்து ஒன்பது சிறுத்தைகளும் இந்தியா வந்தடைந்தன.

குனோ தேசிய பூங்காவைத் தொடர்ந்து மற்ற பொருத்தமான வனப்பகுதிகளிலும் சிறுத்தைகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT