Loading...
காவல் நிலையத்திற்கு இனி அலைய தேவையில்லை: இணையதளம்  வழியாக CSR ரசீது பெறும் புதிய சேவை இன்று அறிமுகம்
காவல் நிலையம் செல்லாமலேயே இ-சிஎஸ்ஆர் ரசீது பெறும் புதிய சேவை இன்று அறிமுகம்

காவல் நிலையத்திற்கு இனி அலைய தேவையில்லை: இணையதளம்  வழியாக CSR ரசீது பெறும் புதிய சேவை இன்று அறிமுகம்

எழுதியவர் Vasuki
Nov 18, 2026
02:04 pm

செய்தி முன்னோட்டம்

பொதுமக்கள் இனி காவல் நிலையங்களுக்கு நேரில் செல்லாமலேயே, இணையதளம் வாயிலாகத் தங்களது புகார்களைப் பதிவு செய்து அதற்கான e-CSR ஒப்புகை ரசீதை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளும் புதிய டிஜிட்டல் சேவை இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு காவல்துறையின் இந்த புதிய இணையவழிச் சேவையை காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைக்கிறார். ஆவணங்கள் தொலைந்து போதல் மற்றும் பொதுவான புகார்களுக்கு ரசீது பெற மக்கள் காத்திருப்பதைத் தவிர்த்து, வெளிப்படைத்தன்மையுடன் விரைவான சேவையை வழங்க இத்திட்டம் பெரிதும் உதவும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

விரைவான சேவை

பொதுமக்களின் அலைச்சலை குறைக்கும் டிஜிட்டல் முன்னெடுப்பு

ஆவணங்கள் தொலைந்து போதல் மற்றும் பொதுவான புகார்களுக்கு சிஎஸ்ஆர் ரசீது பெறப் பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று காத்திருக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது.

இதற்குத் தீர்வாக, தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தபடியே இணையதளம் மூலம் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான ஒப்புகை ரசீதான e-CSR சான்றிதழை உடனுக்குடன் பதிவிறக்கம் செய்யும் புதிய வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைக்கும் இந்த இணையவழிச் சேவையின் மூலம், பொதுமக்களின் நேரமும் அலைச்சலும் குறைவதுடன் காவல் நிலையப் பணிகளும் விரைவுபடுத்தப்படும் எனத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT