Loading...

இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

125 நாள் வேலைத் திட்டம்: புகார்களுக்கு 15 நாட்களில் தீர்வு; மத்திய அரசு புதிய விதிகள் வெளியீடு

கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் 125 நாள் வேலைத் திட்டத்தில் (VB-G RAM G) பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் புகார்களை வெறும் 15 நாட்களுக்குள் உடனடியாக விசாரித்துத் தீர்வு காணும் வகையில், மத்திய அரசு புதிய சிறப்பு குறைதீர்ப்பு விதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

₹10, ₹20 நோட்டுகளுக்கு தட்டுப்பாடா? உண்மை நிலவரத்தை விளக்கிய மத்திய அரசு

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், நாடு முழுவதும் சந்தைகளில் 10, 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பணமில்லாப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க இவ்வகை நோட்டுகளை அச்சிடுவதை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) குறைத்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு சுற்றறிக்கை பரவி வருகிறது.

03 Nov 2026
• நேபாளம்

நேபாள ஹெலிகாப்டர் விபத்த்தில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி பலி

நேபாளத்தின் உலகப் புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகர பகுதியில் அமைந்துள்ள சோலுகும்பு மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு தனியார் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முயன்ற போது ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

03 Nov 2026
• தீபாவளி

தீபாவளிக்கு முன்பே திணறும் டெல்லி; பாகிஸ்தானில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளால் எகிறிய காற்று மாசுபாடு

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மிக கடுமையான அளவில் சரிந்து 'மிகவும் மோசம்' மற்றும் 'கடும் ஆபத்து' பிரிவை எட்டியுள்ளது.

03 Nov 2026
• டெல்லி

போராட்டம் நடத்த நிரந்தரமாக இடத்தை ஆக்கிரமிக்க முடியாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

டெல்லி ஜந்தர் மந்தரில் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நடத்திய தொடர் போராட்டங்கள் தொடர்பான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், "போராட்டம் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை எந்தவொரு அமைப்பும் காலவரையின்றி/நிரந்தரமாக ஆக்கிரமித்து வைத்திருக்க முடியாது" என தெரிவித்துள்ளது.

03 Nov 2026
• தீபாவளி

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை: தமிழக அரசு உத்தரவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்புவதற்கு ஏதுவாக, தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9-ஆம் தேதி திங்கட்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு மகிழ்ச்சிகரமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

03 Nov 2026
• அதிமுக

ரூ. 35.79 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் மனைவிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

அதிமுக ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு அமலாக்கத்துறை (ED) மீண்டும் விசாரணைச் சம்மன் அனுப்பியுள்ளது.

03 Nov 2026
• அமெரிக்கா

ஓமன் கடற்பகுதியில் இந்திய சரக்குக் கப்பல் மீது வான்வழித் தாக்குதல்: குஜராத் மாலுமி பலி, 13 பேர் மீட்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓமன் கடற்பகுதியில் 14 இந்திய மாலுமிகளுடன் பயணித்த இந்தியக் கொடி பொருத்தப்பட்ட MSV Al Jusufi என்ற சரக்குக் கப்பல் மீது வான்வழியாக இனம்தெரியாத ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 7 முதல் மீண்டும் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் தகவல்

தெற்கு ஆந்திரக் கரையை நோக்கி நகர்ந்த 'முரசு' தீவிரப் புயல் இன்று அதிகாலை கரையை கடக்கத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் வி.ஆர். துரை தெரிவித்துள்ளார்.

03 Nov 2026
• வங்க கடல்

ஆந்திராவில் 'முரசு' தீவிர புயல் கரையை கடக்கத் தொடங்கியது: ஒங்கோல் அருகே மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சூறாவளி

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த 'முரசு' தீவிரப் புயல், இன்று அதிகாலை 1.00 மணியளவில் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஒங்கோல் அருகே கரையை கடக்கத் தொடங்கியது.

02 Nov 2026
• கல்வி

மாணவர்களுக்கு ₹12,000 கல்வி உதவித்தொகை; NMMSS விண்ணப்பக் காலக்கெடு நீட்டிப்பு; முழு விவரம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான பள்ளி மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் NMMSS உதவித்தொகைக்கான விண்ணப்ப அவகாசத்தை மத்திய கல்வி அமைச்சகம் நீட்டித்துள்ளது.

குறைந்த கட்டணத்தில் ஆம்னி பேருந்து டிக்கெட்: தமிழக பஸ் உரிமையாளர்கள் உருவாக்கிய 'Roamie' ஆப் வெளியீடு

தனியார் ஆன்லைன் பயணச் சீட்டு முன்பதிவு நிறுவனங்களுக்கு வழங்கும் அதிகப்படியான கமிஷன் தொகையை குறைக்கவும், பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் பேருந்து டிக்கெட்டுகளை வழங்கவும் தமிழ்நாட்டின் பல்வேறு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் ஒன்று சேர்ந்து ரோமி என்ற புதிய ஆன்லைன் முன்பதிவு தளத்தைத் தொடங்கியுள்ளன.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழிக்கு அனுமதி எப்போது? 1965 மத்திய அரசின் முடிவை எதிர்த்து வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கு

சென்னை உயர் நீதிமன்றத்தின் அன்றாட வழக்கு விசாரணைகளில் தமிழ் மொழியைப் பயன்படுத்த அனுமதி வழங்கிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (MHAA) சார்பில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

02 Nov 2026
• தேனி

தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்: முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து முதல்வர் விஜய் உத்தரவு

தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் சுவரை ஏறி தப்பிச் சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநிலத்தின் அனைத்துச் சிறைகளிலும் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: சென்னை - கன்னியாகுமரி, தென்காசி ரயில்கள் முன்பதிவு விவரம்

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி மற்றும் தாம்பரம் - தென்காசி இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

02 Nov 2026
• கடற்படை

இந்திய கடற்படைக்கு 8 புதிய போர் கப்பல்கள்: ரூ. 53,866 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்து

இந்திய கடற்படையின் கடலோர பாதுகாப்பு மற்றும் போர்த்திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரூ. 53,866.50 கோடி (சுமார் 6.4 பில்லியன் டாலர்) மதிப்பில் 8 அடுத்த தலைமுறை போர் கப்பல்களை உருவாக்க இரண்டு பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

02 Nov 2026
• விஜய்

முரசு புயல்: ஆந்திராவுக்கு 500 மின்வாரிய ஊழியர்களை அனுப்பிய தமிழக அரசு

வங்கக்கடலில் தீவிரமடைந்துள்ள 'முரசு' புயல் பாதிப்புகள் மற்றும் மின்தடை சீரமைப்புப் பணிகளுக்காக தமிழகத்திலிருந்து முதற்கட்டமாக 500 மின்வாரியப் பணியாளர்கள் ஆந்திராவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

02 Nov 2026
• டாஸ்மாக்

டாஸ்மாக் பாட்டில் முறைகேடு, ஊழியர்கள் போராட்டம், தனியார்மயம் குறித்து அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

02 Nov 2026
• வங்க கடல்

'முரசு' தீவிர புயல்: சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, பல்வேறு மாவட்டங்களில் மழை அபாயம்

வங்கக்கடலின் மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள 'முரசு' தீவிர புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடல் கொந்தளிப்புடன் பலத்த காற்றும், தொடர் கனமழையும் பெய்து வருகிறது.

02 Nov 2026
• வங்க கடல்

வங்கக்கடலில் சீறும் 'முரசு' தீவிரப் புயல்: சென்னையில் 11 விமானங்கள் ரத்து

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'முரசு' தீவிரப் புயல் ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 11 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

02 Nov 2026
• திமுக

ரூ. 100 கோடி பள்ளி ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல்

திமுக ஆட்சி காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் சிஎம்டிஏ, டிடிசிபி அனுமதிகளை பெற்று தருவதாகக் கூறி ரூ. 100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தொடரப்பட்ட ஊழல் வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

02 Nov 2026
• திமுக

ரூ. 634 கோடி லஞ்ச வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பணியாற்றிய கே.என். நேருவுக்கு எதிராக தொடரப்பட்ட ரூ. 634 கோடி லஞ்ச வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து இலவச பயணச் சலுகை & AI உபகரணங்களுக்கு ரூ. 30,000 மானியம்: தமிழக அரசு அரசாணை

மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பயணம் மற்றும் தற்சார்பு வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில், அரசுப் பேருந்துகளில் இலவச பயண சலுகையை மேலும் பல பேருந்துகளுக்கு விரிவுபடுத்தியும், AI சார்ந்த நவீன உதவி உபகரணங்கள் வாங்க நிதியுதவி அளித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

02 Nov 2026
• இந்தியா

மகாதேவ் ஆப் முறைகேடு வழக்கு: ஓமானில் இருந்து முக்கிய குற்றவாளி சௌரப் சந்திராகர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டார்

இந்தியாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பணமோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியும், 'மகாதேவ் ஆன்லைன் புக்' செயலியின் நிறுவனருமான சௌரப் சந்திராகரை ஓமான் சுல்தானகத்திலிருந்து சிபிஐ வெற்றிகரமாக இந்தியாவுக்குப் பிடித்து வந்துள்ளது.

புதுக்கோட்டை, ஈரோட்டிற்கு 2 நாள் பயணமாக பறக்கும் முதல்வர் விஜய்: ரோடு ஷோ, விழா விவரங்கள்

புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்று, புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்றும், நாளையும் தனி விமானம் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தீவிரப் புயலாக வலுவடைந்தது 'முரசு': சென்னையில் விடிய விடிய கனமழை; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தென்மேற்கு மற்றும் மேற்கு-மத்திய வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த முரசு புயல் தீவிரப் புயலாக வலுவடைந்து, மணிக்கு 20 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

01 Nov 2026
• டெல்லி

'தலைமைத் தேர்தல் ஆணையர் சிறைக்குச் செல்வார்': டெல்லி மாபெரும் பேரணியில் ராகுல் காந்தி பேச்சு

டெல்லி ராம்லீலா மைதானத்தில் INDIA சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், SIR நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

01 Nov 2026
• பெங்களூர்

பெங்களூரில் ஹோட்டல் நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்து 2 ஐரோப்பியர்கள் பலி; விசாணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

பெங்களூரில் உள்ள பிரபல கான்ராட் நட்சத்திர ஹோட்டல் நீச்சல் குளத்தில் மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு ஐரோப்பிய விருந்தினர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் தொடர்பாக, நீச்சல் குளத்திற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகளில் ஏற்பட்ட கோளாறுகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குரூப் 2 தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தகவல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ். பிரபாகர் தெரிவித்துள்ளார்.

01 Nov 2026
• சிறை

தமிழக சிறைகளில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை சாதனை: ரூ.67 கோடியில் மெகா டெண்டர்

சிறைச்சாலைகள் என்பவை வெறும் தண்டனை கூடங்கள் மட்டுமல்ல, குற்றவாளிகளை நல்வழிப்படுத்தி வாழ்க்கையில் ஒளியேற்றும் மறுவாழ்வு மையங்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக சிறைத்துறை புதிய சாதனையை படைத்துள்ளது.

01 Nov 2026
• வங்க கடல்

முரசு புயல் : காவலி அருகே கரையை கடக்க வாய்ப்பு, சென்னைக்கு கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று காலை தீவிரமடைந்து முரசு புயலாக உருவெடுத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

01 Nov 2026
• இந்தியா

மம்தாவுடன் சந்திப்பு: இந்தியா கூட்டணி பேரணியில் பங்கேற்க மாட்டோம் என சிஜேபி அறிவிப்பு

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சனிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசிய 'காக்ரோச் ஜனதா கட்சி' நிறுவனர் அபிஜீத் திப்கே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் 'இந்தியா' கூட்டணி முன்னெடுக்கும் மாபெரும் பேரணிக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

விரைவில், தமிழக அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் வாரம் ஒருமுறை வேட்டி சட்டை அணிவது கட்டாயம்

தமிழக அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் துறை சார்ந்த அனைத்து உயர் அதிகாரிகளும் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் பாரம்பரிய வேஷ்டி மற்றும் சட்டை அணிந்து பணிக்கு வர வேண்டும் என்று முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க திட்டமிட்டு வருகிறது.

01 Nov 2026
• ராஜஸ்தான்

40 சொகுசு பங்களாக்கள் ஊழல்: ராஜஸ்தான் ஐஏஎஸ் ஐபிஎஸ் தம்பதி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

ராஜஸ்தானில் ஒரே தனியார் நிறுவனத்திடமிருந்து ₹6.16 கோடிக்கு 40 சொகுசு பங்களாக்கள் மற்றும் காட்டேஜ்களை வாங்கி, பின்னர் அதே நிறுவனத்திற்கே குத்தகைக்கு விட்டு ஆண்டுதோறும் ₹1.80 கோடி வாடகை வருவாய் ஈட்டிய விவகாரத்தில், அம்மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தம்பதி மீது ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

01 Nov 2026
• தமிழகம்

இல்லத்தரசிகளுக்கு ரூ. 2,500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் தந்த முக்கிய அப்டேட்

தமிழகத்தில் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இல்லத்தரசிகளின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ. 2,500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தின் தற்போதைய கள நிலவரங்கள் மற்றும் மறுசீரமைப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன.

01 Nov 2026
• தமிழ்நாடு

தமிழகத்தில் 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை: முதலமைச்சர் விஜய் நடவடிக்கை

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் வகையில், 30 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.

01 Nov 2026
• தமிழ்நாடு

தமிழ்நாடு நாள் 2026: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் விஜய் தமிழ் மக்களுக்கு வாழ்த்து

இன்று நாடு முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியோர் தமிழக மக்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பெங்களூர் - மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இன்று தொடக்கம்: கட்டணம் மற்றும் வழித்தட விவரங்கள்

நாட்டின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான வர்த்தக வழித்தடங்களில் ஒன்றான பெங்களூர் - மும்பை இடையே அதிநவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று தொடங்கி வைக்கிறார்.

01 Nov 2026
• தமிழகம்

தமிழகத்தில் GPS இல்லையென்றால் கனிம வளங்கள் ஏற்றிச் செல்ல தடை: இன்று முதல் அமல்

தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஜல்லிக்கற்கள், எம்-சாண்ட் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் GPS கருவி பொருத்துவதை கனிம வளத் துறை கட்டாயமாக்கியுள்ளது.

வங்கக்கடலில் இன்று உருவாகிறது 'முரசு' புயல்: ஆந்திராவில் கரையை கடக்க வாய்ப்பு, எந்தெந்த பகுதிகளில் ரெட் அலர்ட்?

நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் 'அர்னாப்' புயலைத் தொடர்ந்து, வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலுக்கு 'முரசு' எனப் பெயரிடப்படுகிறது.