Loading...
'முரசு' தீவிர புயல்: சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, பல்வேறு மாவட்டங்களில் மழை அபாயம்
சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

'முரசு' தீவிர புயல்: சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, பல்வேறு மாவட்டங்களில் மழை அபாயம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 02, 2026
03:59 pm

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலின் மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள 'முரசு' தீவிர புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடல் கொந்தளிப்புடன் பலத்த காற்றும், தொடர் கனமழையும் பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது 'முரசு' தீவிரப் புயல் மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடற்கரையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நெல்லூருக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு வடகிழக்கே 180 கி.மீ தொலைவிலும், ஒங்கோலுக்கு தென்கிழக்கே 210 கி.மீ தொலைவிலும் இப்புயல் மையம் கொண்டுள்ளது.

மழை

சென்னை, திருவள்ளூரில் 15 செ.மீ மழை எதிர்பார்க்கப்படுகிறது

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் காலை முதலே பரவலாக சாரல் மழை பெய்து வரும் நிலையில், மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் 15 செ.மீ வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இடையிடையே மணிக்கு 75 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும்.

இது தவிர தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு வரும் நாட்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT