இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
கோயில் அருகே பக்தர்கள் மீது பாய்ந்த லாரி! 12 பேர் பரிதாப பலி; குவாலியரில் பெரும் சோகம்
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள புகழ்பெற்ற ஷீத்லா மாதா கோயில் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி பக்தர்கள் மீது பாய்ந்து விபத்துக்குள்ளானது.
கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் நெரிசலில் சிக்கி 18-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம்
மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சோர் பகான் சர்வஜநீன் துர்கா பூஜை பந்தலில் இன்று மாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அபிஜீத் திப்கேவுக்கு நிபந்தனை ஜாமீன்: கன்னாட் பிளேஸ் போராட்டத்தில் கைதானவர் விடுதலை
தலைநகர் தில்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் சென்ட்ரல் பார்க் பகுதியில் 'லெஹ்ரா தோ திரங்கா' (தேசியக் கொடியை ஏந்துவோம்) என்ற பெயரில் போராட்டம் நடத்த முயன்றபோது கைது செய்யப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கேவுக்கு (Abhijeet Dipke), சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகள் அக்டோபர் 24 வரை ரத்து: ஏர் இந்தியா அறிவிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் கடுமையான போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, சவுதி அரேபியாவுக்கு இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளையும் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதிமுகவில் இணைகிறாரா தனுஷ்? இருகரம் கூப்பி வரவேற்போம்: ராஜேந்திர பாலாஜி பேட்டி
நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்கவுள்ளதாகவும், தனிக்கட்சி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பரவி வரும் யூகங்களுக்கு இடையே, அவர் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் 3 நாட்களுக்குக் கனமழை கொட்டும்! செங்கல்பட்டுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்தது வானிலை மையம்
தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 17) முதல் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இணைய அணுகல் அடிப்படை உரிமை: சிறுவர்களுக்கான வயது வரம்புத் தடையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு வயது அடிப்படையில் ஒட்டுமொத்தத் தடை விதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இன்று 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 17) நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் சாலையோர வசதி மையங்கள் அமைக்கும் டெண்டர் ரத்து: TNSHA அறிவிப்பு
தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக 7 மாவட்டங்களில் நவீன சாலையோர வசதி மையங்களை அமைப்பதற்கான டெண்டரைத் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) ரத்து செய்துள்ளது.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இனி சென்சஸ் பணி! மத்திய அரசு விதிகளில் திருத்தம்
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, 1990 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
திரங்கா யாத்திரை போராட்டத்தில் பரபரப்பு! சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே நீதிமன்றத்தில் ஆஜர்? நேஹா போரா விடுவிப்பு
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) சார்பாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) நடத்தப்பட்ட லெஹ்ரா தோ திரங்கா பேரணியின் போது, அதன் நிறுவனத் தலைவர் அபிஜீத் தீப்கே டெல்லி காவல்துறையால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி! நெஞ்சுத் தொற்றால் டெல்லி அப்பல்லோவில் தீவிர சிகிச்சை
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, திடீர் நெஞ்சுத் தொற்று காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜிசாட்-7சி ராணுவ செயற்கைக்கோள்: இந்திய விமானப்படைக்கு ₹2,563 கோடி ஒப்பந்தம்
இந்திய விமானப்படையின் வான்வழி செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு நெட்வொர்க்கை மேலும் வலுப்படுத்தும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஜிசாட்-7சி என்ற பிரத்யேக ராணுவ செயற்கைக்கோளை உருவாக்க ₹2,563 கோடி மதிப்பில் புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
டெல்லியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' நிறுவனர் அபிஜீத் திப்கே கைது: தேசியக்கொடி ஏந்தும் போராட்டத்திற்கு முன் பரபரப்பு
டெல்லியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) சார்பில் அறிவிக்கப்பட்ட தேசியக்கொடி ஏந்தும் பேரணியைத் தடுத்து நிறுத்தும் விதமாக, அதன் நிறுவனர் அபிஜீத் திப்கேவை டெல்லி காவல்துறை தடுப்புக்காவலில் எடுத்துள்ளது.
உங்கள் பகுதியில் நாளை (அக்டோபர் 17) எங்கெல்லாம் மின்தடை? உங்கள் ஏரியா இருக்கா தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மார்கோ ரூபியோவின் மும்பை பயணம் குறித்து பிரதமரை சாடிய ராகுல் காந்தி
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவின் வரவிருக்கும் இந்தியப் பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
MBBS மாணவர்களுக்கு குட் நியூஸ்! முதல் ஆண்டு தேர்வை எழுத கூடுதல் வாய்ப்பு வழங்கி NMC உத்தரவு
NMC, எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான தேர்வுகளில் ஒரு முக்கியத் தளர்வை அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்: தமிழக அரசு சூப்பர் திட்டம்
தமிழ்நாட்டில், சுமார் 2.29 கோடி குடும்ப அட்டைகளில் உள்ள 7.01 கோடி பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கோவையில் பிரம்மாண்ட பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்: முழு சிறப்பம்சங்கள்
கோவை காந்திபுரத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை' தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
மக்களவையில் சிறப்பு கூட்டத்தொடர்? தொகுதி மறுசீரமைப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
SIR மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்தி வரும் சூழலில், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய அரசியல் சாசன திருத்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தீவிரம் காட்டும் வடகிழக்கு பருவமழை; சென்னையில் இன்று மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்பட்டதைவிட ஒரு நாள் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
டிசம்பர் 11-ல் கனடா செல்கிறார் பிரதமர் மோடி: கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் முக்கியப் பேச்சுவார்த்தை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் தொலைபேசியில் நடத்திய ஆக்கப்பூர்வமான உரையாடலைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனடாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய செய்தி! வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்
வரவிருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி அத்தியாவசிய பொருட்களைப் பெறும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை(அக்டோபர் 18) தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு; 32 ஆயிரம் போலீஸார் குவிப்பு: இன்று என்ன நடக்கிறது?
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, காகரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில் இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ள தேசியக் கொடி ஏந்தும் பேரணியை முன்னிட்டு, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.
தமிழகத்தில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் தீவிர பரவல்: நோயாளிகளை 3 பிரிவுகளாக பிரித்து சிகிச்சை அளிக்கச் சுகாதாரத் துறை உத்தரவு
தமிழகத்தில் நிலவி வரும் திடீர் மழை, அதீத வெப்பம் மற்றும் பனிப்பொழிவு போன்ற சீரற்ற சீதோஷ்ண நிலை காரணமாக, பருவக்கால இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
உங்கள் பகுதியில் இன்று (அக்டோபர் 16) எங்கெல்லாம் மின்தடை?
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளதா? தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு! 17 மாநிலங்களில் புதிய வாக்காளர் சேர்க்கை
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட புதிய மற்றும் தகுதியான வாக்காளர்களை சேர்ப்பதற்காக 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தை (SSR) அறிவித்து வியாழக்கிழமை (அக்டோபர் 15) அன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நாளை கேரளா பயணம்: கோவையில் 'பெரியார் அறிவுலகம்' திறப்புக்கு பின் திருச்சூர் செல்கிறார்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை கேரளா மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
அமெரிக்காவில் இந்துக் கோயில் மீதான தாக்குதல் திட்டம்: இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள இந்துக் கோயில் மீது நடத்தத் திட்டமிடப்பட்ட வெகுஜனத் துப்பாக்கிச்சூடு முறியடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
அம்பத்தூரில் CapitaLand டேட்டா சென்டர் திறப்புவிழாவின் போது அன்னாசி பழம் உருட்டிய முதல்வர் விஜய்: பின்னணி என்ன?
சென்னை அம்பத்தூரில், சிங்கப்பூரை சேர்ந்த முன்னணி நிறுவனமான கேபிட்டலேண்ட் (CapitaLand) அமைத்துள்ள 46 மெகாவாட் திறன் கொண்ட பிரம்மாண்ட தரவு மையத்தை, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் இணைந்து இன்று காலை திறந்து வைத்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு கண்டனம்: 'யாரும் எங்களை மிரட்ட முடியாது' என தலைமை நீதிபதி சூர்யா காந்த் காட்டம்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் SIR-ற்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் கடந்த அக்டோபர் 12 அன்று உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி நடத்தியதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உயரும் அரிசி விலை: 2-3 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் பேட்டி
தமிழகத்தில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது.
தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி செக்; மதம் மாறியவர்களுக்கு பிசி முஸ்லிம் இடஒதுக்கீடு கிடையாது
இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவர்கள், தங்களது முந்தைய சாதி நிலையின் அடிப்படையில் தமிழக அரசின் 'பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்' இடஒதுக்கீட்டு பலன்களை தானாக கோர முடியாது எனத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
தமிழக பாஜக புதிய தலைவராக நடிகர் சரத்குமார் நியமனம்? நயினார் நாகேந்திரனுக்கு மாற்றாக தீவிரப் பரிசீலனை
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகளை தொடர்ந்து, தமிழ்நாட்டின் பாஜக அமைப்பில் மாற்றங்களை செய்ய தேசிய தலைமை திட்டமிட்டு வருகிறது.
சிக்கிம் ஆளுநர் நியமனத்திற்கு எதிராக அங்கிதா பண்டாரி பெற்றோர் இந்தியா கேட் முன்பு போராட்டம்: யார் இவர்கள்?
உத்தரகாண்டின் ரிஷிகேஷில் படுகொலை செய்யப்பட்ட 19 வயது வரவேற்பாளர் அங்கிதா பண்டாரியின் பெற்றோர், துஷ்யந்த் குமார் கவுதம் சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்டதை எதிர்த்துத் டெல்லி இந்தியா கேட் பகுதியில் புதன்கிழமை மாலை திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைகளுக்கு எதிராகவும், வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம்: டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகள் உட்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டெல்லியில் தேசியக் கொடியுடன் திரள CJP தலைவர் அபிஜீத் திப்கே அழைப்பு
டெல்லி ஜந்தர் மந்தரில் மூவர்ணக் கொடியை ஏந்தி போராட்டம் நடத்தியதற்காகக் காக்ரோச் ஜனதா கட்சியின்(CJP) முக்கிய தலைவர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் 5 நாட்கள் நீதிபதி காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரயில்வே ஊழியர்களுக்கு செம நியூஸ்! ரூ.17,951 வரை தீபாவளி போனஸ் என மத்திய அரசு அறிவிப்பு
இந்திய ரயில்வேயில் பணியாற்றும் சுமார் 11.4 லட்சம் ஊழியர்களுக்கு 2025-26ஆம் நிதியாண்டிற்கான உற்பத்தி சார்ந்த போனஸாக 78 நாட்களுக்கான ஊதியத்தை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.3,108 கோடியில் சென்னை 'ரிங் மெயின்' குடிநீர் திட்டம்: முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்
அதிவேகமாக விரிவடைந்து வரும் சென்னை பெருநகரப் பகுதிகளுக்குத் தடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், நகரின் முக்கிய ஒன்பது நீராதாரங்களையும் ஒரே கட்டமைப்புக்குள் ஒருங்கிணைக்கும் ரிங் மெயின் சிஸ்டம் என்ற புதிய பிரம்மாண்ட திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் சோழிங்கநல்லூரில் இன்று அடிக்கல் நாட்டினார்.