கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் நெரிசலில் சிக்கி 18-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம்
செய்தி முன்னோட்டம்
மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சோர் பகான் சர்வஜநீன் துர்கா பூஜை பந்தலில் இன்று மாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள சாரா பார்க் (சோர் பகான்) பகுதியில் அமைந்துள்ள துர்கா பூஜை பந்தலில் இன்று மாலை தொடர்ந்து பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பந்தலின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மிகவும் குறுகியதாக இருந்ததாகவும், போதிய வெளிச்ச வசதிகள் செய்யப்படவில்லை என்றும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தனர். மாலை வேளையில் பெய்த கனமழையால் பந்தலுக்குள் ஏற்பட்ட அதீத கூட்ட நெரிசலில் பலரும் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர்.
ஆய்வு
அரசின் நடவடிக்கைகள் மற்றும் தலைவர்கள் நேரில் ஆய்வு
கூட்டநெரிசலில் சிக்கியவர்களை விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீட்டு உடனடியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சம்பவத்திறகு பிறகு மேற்கு வங்க அரசு உடனடியாக 18003455678 என்ற கட்டணமில்லா உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், விபத்து நடந்த பந்தல் பொதுமக்களின் பார்வைக்கு உடனடியாக மூடப்பட்டுள்ளது.
கொல்கத்தா மருத்துவக் கல்லூரிக்கு விரைந்த மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மற்றும் தலைமைச் செயலாளர் மனோஜ் அகர்வால் ஆகியோர் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.