அம்பத்தூரில் CapitaLand டேட்டா சென்டர் திறப்புவிழாவின் போது அன்னாசி பழம் உருட்டிய முதல்வர் விஜய்: பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
சென்னை அம்பத்தூரில், சிங்கப்பூரை சேர்ந்த முன்னணி நிறுவனமான கேபிட்டலேண்ட் (CapitaLand) அமைத்துள்ள 46 மெகாவாட் திறன் கொண்ட பிரம்மாண்ட தரவு மையத்தை, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஆகியோர் இணைந்து இன்று காலை திறந்து வைத்தனர். சென்னை தொழில் வளர்ச்சிக்கும், டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கும் மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய தரவு மையம், சுமார் 4,900 சர்வர் ரேக்குகளுடன் அதிநவீன தொழில்நுட்பக் கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், வழக்கம் போல ரிப்பன் வெட்டித் திறப்பதற்கு பதிலாக சிங்கப்பூர் கலாச்சார மரபுப்படி அன்னாசி பழத்தை உருட்டி மையத்தைத் திறந்து வைத்த முதலமைச்சரின் செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
😂😂❤️ pic.twitter.com/yErSdQ5qIB
— Jegadesh (@IamJegadeshVJ) October 15, 2026
விவரங்கள்
ஃபெங் சுய் மற்றும் கலாச்சாரப் பின்னணி
சிங்கப்பூர் கலாச்சாரத்தில் புதிய அலுவலகம் அல்லது வீட்டைத் திறக்கும் போது, வாசலில் இருந்து அன்னாசி பழத்தை உருட்டி விடுவது அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை ஈர்க்கும் பாரம்பரியச் சடங்காகும்.
'ஹொக்கியன்' மொழியில் அன்னாசி பழத்திற்கு "ஓங் லாய்" என்று பெயர். இதன் பொருள் "அதிர்ஷ்டமும் செழிப்பும் உங்களைத் தேடி வருகிறது" என்பதாகும்.
விழாவில் பழத்தை உருட்டிய போது, சிங்கப்பூர் மரபுப்படி "ஹுவாட் ஆ!" (வளம் பெறுக/செழிக்கட்டும்) எனக் கூறித் திறந்து வைத்தனர்.
ஃபெங் சுய் தத்துவத்தின்படி அன்னாசி பழம் தங்கம் மற்றும் செல்வத்தின் குறியீடமாகக் கருதப்படுகிறது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமின்றி, முதலீட்டாளர்களின் கலாச்சாரத்தையும் மதித்து முதல்வர் விஜய் இந்தச் சடங்கில் பங்கேற்றது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கப்பூர் பிரதிநிதிகளிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.