இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகம் 'தேவி' என்ற ஏஐ அவதாரத்தை அறிமுகம் செய்தது
செய்தி முன்னோட்டம்
இந்தோனேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம், கலாச்சாரம், சுற்றுலா, கல்வி உதவித்தொகை, வணிக முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தூதரகச் செய்திகளை பகிர்ந்து கொள்வதற்காக 'Dewi' என்ற செயற்கை நுண்ணறிவு (AI) அவதாரத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. நவரத்திரி மற்றும் துர்கா பூஜை திருவிழா காலத்தில் இந்த புதிய டிஜிட்டல் சேவைத் தொடங்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய மொழியில் 'தேவி' என்றால் 'தேவதை' அல்லது 'கடவுள்' என்று பொருளாகும். இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவிற்கு வர விரும்பும் இந்தோனேசிய குடிமக்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த AI அவதாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
பயன்பாடு
டிஜிட்டல் சேவை மற்றும் இந்திய சமூகத்தின் பயன்பாடு
தற்போது இந்தோனேசியாவில் சுமார் 1,30,000 இந்திய வம்சாவளியினரும் (PIO) மற்றும் 15,000 தற்காலிகமாக வசிக்கும் இந்தியர்களும் (NRI) வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் கணக்காளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்ற தொழில்முறை வல்லுநர்கள் ஆவர்.
'தேவி' ஏஐ அவதாரம் மூலம் தூதரகச் சேவைகள், விசா வழிகாட்டுதல்கள் மற்றும் இருதரப்பு கூட்டுறவு தொடர்பான அனைத்து முக்கியத் தகவல்களும் பொதுமக்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கும். விசா
இந்தோனேசியாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் மற்றும் இருநாட்டு உறவுகளில் ஆர்வமுள்ளவர்களும் 'தேவி' ஏஐ பக்கத்தை பின்தொடருமாறு இந்தியத் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.