Loading...
டிசம்பர் 11-ல் கனடா செல்கிறார் பிரதமர் மோடி: கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் முக்கியப் பேச்சுவார்த்தை
டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனடாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி

டிசம்பர் 11-ல் கனடா செல்கிறார் பிரதமர் மோடி: கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் முக்கியப் பேச்சுவார்த்தை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2026
11:02 am

செய்தி முன்னோட்டம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் தொலைபேசியில் நடத்திய ஆக்கப்பூர்வமான உரையாடலைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனடாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஒட்டாவாவில் உள்ள இந்திய உயர் ஆணையம் வெள்ளிக்கிழமை இந்த அதிகாரப்பூர்வ பயணத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இரு நாட்டு தலைவர்களுக்கிடையேயான தொலைபேசி உரையாடலில், இருதரப்பு வர்த்தகம், ஆற்றல், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் மக்கள் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது இந்தியா - கனடா இடையிலான 'விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தை' (CEPA) விரைவாக இறுதி செய்ய இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

வர்த்தகப் பேச்சுவார்த்தை

தூதரக உறவில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை ஆண்டுக்கு 70 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கனடாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மணீந்தர் சித்து தலைமையிலான 300 தொழிலதிபர்கள் கொண்ட குழு தற்போது இந்தியாவில் தீவிர வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு வேன்கூவரில் நடைபெற்ற ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை விவகாரத்தில், அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவு பெருமளவில் பாதிக்கப்பட்டது.

எனினும், ட்ரூடோவுக்கு பின் கனடாவின் பிரதமராக பொறுப்பேற்ற மார்க் கர்னி, இந்தியாவைத் "நம்பகமான வர்த்தகக் கூட்டாளி" எனக் குறிப்பிட்டு உறவைச் சீரமைக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ADVERTISEMENT