இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
மத்திய அரசின் 200 அதிகாரிகள் எதிர்க்கட்சிகளுடன் தொடர்பில் உள்ளனர்: ராகுல் காந்தி வெளியிட்ட தகவல்
உச்ச நீதிமன்றத்தை நோக்கி 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் மற்றும் தலைவர்கள் 'ஜனநாயகப் பேரணி' புறப்படுவதற்கு முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிக முக்கியக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
காக்ரோச் வரிசையில் புதிய 'ஈ' கட்சி; இணையத்தை அதிரவைக்கும் டிஜிட்டல் அரசியல் நையாண்டி
இந்தியாவின் இணையப் பக்கங்களை உலுக்கிய காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நையாண்டி இயக்கத்தைத் தொடர்ந்து, தற்போது 'மக்கி ஜனதா கட்சி'(MJP) என்ற புதிய டிஜிட்டல் அமைப்பு களமிறங்கியுள்ளது.
வானில் 21 கிமீ உயரத்தில் சாதனை! இந்தியாவின் முதல் HAPS ஏர்ஷிப் சோதனையை வெற்றிகரமாக முடித்தது டிஆர்டிஓ
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), விண்வெளியின் ஸ்ட்ரேடோஸ்பியர் மண்டலத்தில் நீண்ட நேரம் நிலைநிறுத்தப்படக் கூடிய ஹை ஆல்டிடியூட் பிளாட்ஃபார்ம் சிஸ்டம் (HAPS) என்ற அதிநவீன ஏர்ஷிப்பை வெற்றிகரமாக சோதித்துள்ளது.
டெல்லியில் ஜந்தர் மந்தரில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை; புதிய இடங்கள் எவை?
டெல்லியில் பல ஆண்டுகளாக போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் முக்கிய இடமாக விளங்கி வந்த ஜந்தர் மந்தர் பகுதியை போராட்ட தளமாக பயன்படுத்துவதற்கான அனுமதியை டெல்லி காவல்துறை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.
கொச்சியில் பயங்கர கார் விபத்து; 3 பேரை பலி வாங்கிவிட்டு "எங்க அப்பா பாத்துப்பாரு" என எகிறிய 19 வயது வாலிபர்
கொச்சி சர்வதேச விமான நிலைய சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதிவேகமாக வந்த மினி கூப்பர் சொகுசு கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: அன்பில் மகேஷ் மனு மீது உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறைந்த வட்டியில் வீட்டுக் கடன், விவசாயக் கடன்; தமிழக கூட்டுறவுத்துறையின் மெகா கடன் முகாம்கள்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்கும் குறைந்த வட்டியில் எளிதாக கடன் உதவிகளை வழங்கும் வகையில், கூட்டுறவுத்துறை சார்பில் வாரந்தோறும் மெகா கடன் மேளா மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க முதல்வர் விஜய் கோரிக்கை; அதன் முக்கியத்துவம் என்ன?
தமிழகத்தில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தடைந்தார்.
வெயிலுக்கு விடை கொடுக்கும் மழை! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து நீர்நிலைகள் வறண்டு காணப்படும் சூழலில், தமிழகத்திற்கு நற்செய்தியாக வடகிழக்கு பருவமழை தொடங்கும் தேதியை பிரபல வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
திமுக கூட்டணியைக் காப்பாற்றத் தவறிவிட்டது: திண்டிவனம் மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேச்சு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வண்டிமேடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
உச்ச நீதிமன்றத்தை நோக்கி இந்தியா கூட்டணி 'ஜனநாயகப் பேரணி': CJI சூர்ய காந்த் சந்திப்புக்கு மறுப்பு
இந்தியத் தலைமை நீதிபதி(CJI) சூர்ய காந்த்தை சந்திக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளதாக என ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.
ரயில்வேயில் 3,548 அரசு வேலைகள்! RRB NTPC பட்டதாரி பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரங்கள்
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRB), பட்டதாரி அளவிலான 3,548 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 12) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
விமானத்திற்குள் திடீர் புகை! டெல்லி - சென்னை இண்டிகோ விமானம் ஹைதராபாத்திற்குத் திருப்பப்பட்டு அவசரத் தரையிறக்கம்
டெல்லியிலிருந்து சென்னை நோக்கிப் பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் திடீரென புகை வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
'முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சியை முன்னெடுப்போம்': பிரதமர் மோடி உறுதி
தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யுடன் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சியை மத்திய அரசு தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியை முடக்கக் கூடாது! மெட்ரோ, இன்டர்நெட் மற்றும் நடமாட்ட உரிமைகளை உடனடியாக வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
தலைநகர் டெல்லியில் CJP போராட்டத்தை முன்னிட்டு முடக்கப்பட்ட மெட்ரோ ரயில்கள், தொடர்வண்டி சேவைகள் மற்றும் இணைய வசதிகளை உடனடியாக மீட்டெடுக்க உச்ச நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) உத்தரவிட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கு அமைதியை சீர்குலைக்கக் கூடாது! CJP தலைவர்கள் அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ் நிபந்தனை ஜாமீனில் விடுதலை
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த முயன்ற காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கே, இணை அழைப்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் தாஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
முதலமைச்சர் விஜய்யுடன் மெட்ரோவில் பயணம்! சென்னை மெட்ரோ பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வழித்தடம் 4-ல் பூந்தமல்லி - வடபழனி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பயன்பாட்டிற்காகப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) திறந்து வைத்தார்.
டெல்லி CJP போராட்டம்: தடுப்புகளை அகற்றுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
தலைநகர் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில் போராட்டங்கள் நடத்தப்படுவதை தடுப்பதற்காக, நகர் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் போலிஸ் தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உங்கள் பகுதியில் நாளை (அக்டோபர் 12) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிய துணைத் தேர்தல் ஆணையராக பிரகாஷ் ராஜ்புரோஹித் ஐஏஎஸ் நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசு மேற்கொண்டுள்ள மிகப்பெரிய நிர்வாக அதிகாரிகள் மாற்றத்தின் ஒரு பகுதியாக, மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் ராஜ்புரோஹித் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
'விமானத்தின் அருகே கூட விடுவதில்லை!' F-35 விற்பனை குறித்து அமெரிக்காவிடம் எந்த சலுகையும் இல்லை; IAF தளபதி பரபரப்பு
அமெரிக்காவின் அதிநவீன ஐந்தாம் தலைமுறை F-35 போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ முன்மொழிவும் வரவில்லை என்று இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலிஸ் அறிவிப்பு
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்ற CJP தலைவர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
'எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்!' ஐநா மனித உரிமைகள் அமைப்புக்கு இந்தியா பதிலடி
தலைநகர் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் மற்றும் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது தொடர்பாக ஐநா சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
ஜெயித்தால் சரி, தோற்றால் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய 124 ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.
டெல்லி மெட்ரோ மூடல் & தலைவர்கள் கைது: அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் இன்று சிறப்பு விசாரணை
தலைநகர் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) அறிவித்த போராட்டத்தை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் முடக்கப்பட்டதற்கும், எதிர்க்கட்சித் தலைவர்கள் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டதற்கும் எதிராக இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவசர சிறப்பு விசாரணையை நடத்துகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையரைத் தண்டிக்க முடியுமா? 2023 சட்டப் பிரிவு 16 விளக்கும் உண்மை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (SIR) தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாகக் கூறி சிஜேபி மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
தோனி கஃபேவில் காபி, நீலாங்கரையில் விருந்து! ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் விஜய் திடீர் ஆலோசனை
காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை தீவுத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் குரல் என்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்துள்ளார்.
சென்னைவாசிகளுக்கு குட்நியூஸ்! பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்; முழு நேர அட்டவணை விவரம்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட வழித்தடம் 4-ல், பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து வடபழனி மெட்ரோ நிலையம் வரையிலான 15 கிமீ நீளப் பாதையில் நாளை (அக்டோபர் 11) மாலை முதல் பயணிகள் சேவை தொடங்கப்படுகிறது.
ஃப்ளைதுபாய் விமானக் கடத்தல் முயற்சி: என்ஐஏ பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் FZ1073 பயணிகள் விமானத்தின் காக்பிட்டில், இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் மீது நடத்தப்பட்ட கோடாரித் தாக்குதல் மற்றும் விமானக் கடத்தல் முயற்சி தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அராஜகவாதிகளின் பிளாப் ஷோ! ஜந்தர் மந்தர் போராட்டம் தோல்வி; பாஜக கருத்து
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தை அராஜகவாதிகளின் பிளாப் ஷோ என பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கடுமையாக சாடியுள்ளது.
டெல்லியில் எம்பிக்களுடன் தர்ணா போராட்டம் நடத்திய மம்தா பானர்ஜி கைது
தலைநகர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவிற்கான தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லி காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.
ராஜராஜ சோழன் சதய விழா: அக்.22-ல் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,041-வது சதய விழா மற்றும் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வரும் அக்டோபர் 22 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரேவதி உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றம் அருகே பேரணி! தடுத்து நிறுத்தி வழக்கறிஞர்களைக் கைது செய்த டெல்லி போலிஸ்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி, டெல்லி உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே பகவான் தாஸ் சாலையில் பேரணியாக செல்ல முயன்ற பல வழக்கறிஞர்களை டெல்லி காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.
விமானத்திற்குள்ளேயே நுழைந்த டெல்லி போலீஸ்! சிஜேபி தலைவர் அபிஜீத் திப்கே உள்ளிட்டோர் கைது; தடுப்புக் காவலில் 1500 பேர்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் பிரம்மாண்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது.
டெல்லியில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரின் சீருடையில் பாடிகேம்கள்! CJP போராட்டத்தால் உச்சக்கட்ட பதற்றம்
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அறிவித்துள்ள ஜந்தர் மந்தர் போராட்டத்தைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தடுக்கத் தலைநகர் டெல்லியில் 35,000-க்கும் மேற்பட்ட டெல்லி காவல்துறையினர் மற்றும் மத்தியத் துணை ராணுவப் படையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மக்களே உஷார்! கோவை, நீலகிரி, தேனிக்கு கனமழை எச்சரிக்கை; அக்டோபர் 15 வரை மழை தொடரும்
குமரிக்கடல் பகுதியிலிருந்து வட உள் கர்நாடகா வரை தமிழகம் வழியாக செல்லும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் கோவை, நீலகிரி மற்றும் தேனி ஆகிய மூன்று மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பணிநீக்கம் கோரி குடியரசுத் தலைவரிடம் இந்தியா கூட்டணி புகார் மனு
வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பணிநீக்கம் செய்யக் கோரிக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் 10 முக்கியத் தலைவர்கள் நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்தனர்.
குடியரசுத் தலைவரைச் சந்திக்க இந்தியா கூட்டணி எம்பிக்கள் பேரணி: டெல்லியில் இணைய சேவை நிறுத்தம்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) செயல்பாடுகள் குறித்து தங்களது கடுமையான கவலைகளையும் புகார்களையும் பதிவு செய்ய, எதிர்க்கட்சிகளின் 'INDIA' கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து குடியரசுத் தலைவர் பவனுக்கு பேரணியாக புறப்பட்டுள்ளனர்.