Loading...
காக்ரோச் வரிசையில் புதிய 'ஈ' கட்சி; இணையத்தை அதிரவைக்கும் டிஜிட்டல் அரசியல் நையாண்டி
CJP) நையாண்டி இயக்கத்தைத் தொடர்ந்து, தற்போது 'மக்கி ஜனதா கட்சி'(MJP) என்ற புதிய டிஜிட்டல் அமைப்பு களமிறங்கியுள்ளது

காக்ரோச் வரிசையில் புதிய 'ஈ' கட்சி; இணையத்தை அதிரவைக்கும் டிஜிட்டல் அரசியல் நையாண்டி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 12, 2026
03:38 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் இணையப் பக்கங்களை உலுக்கிய காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நையாண்டி இயக்கத்தைத் தொடர்ந்து, தற்போது 'மக்கி ஜனதா கட்சி'(MJP) என்ற புதிய டிஜிட்டல் அமைப்பு களமிறங்கியுள்ளது. ஈ இமோஜியை மையமாகக் கொண்டு உருவான இந்த புதிய இயக்கம், இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு உத்திகளுடன் சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கியுள்ளது.

உத்வேகம்

உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்திலிருந்து உத்வேகம்

முன்னதாக, காக்ரோச் ஜனதா கட்சி போராட்டங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, போராட்டங்களைக் கையாளும்போது "ஈயைக் கொல்ல சுத்தியலை பயன்படுத்தும்" கொள்கையை பின்பற்ற வேண்டாம் என்று மத்திய அரசுக்கும் டெல்லி காவல்துறைக்கும் அறிவுறுத்தியிருந்தது.

இந்த உச்ச நீதிமன்றக் குறிப்பை தங்களது அடையாளமாக மாற்றியுள்ள புதிய குழுவினர், `@makkhijantaparty` என்ற இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"ஜனநாயகத்தில் குடிமக்களை ஒரு நாள் கரப்பான் பூச்சி என்றும், மறுநாள் ஈ என்றும் முத்திரை குத்துவது சரியா?" என்ற கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

முக்கியத்துவம்

வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

CJP அமைப்பு பெரும்பாலும் போராட்டங்கள், நிறுவனங்களின் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் குறைபாடுகளை மையப்படுத்துவதாகக் குற்றம் சாட்டும் MJP, தாங்கள் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எதிரோ அல்லது ஆதரவோ இல்லை எனக் கூறியுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், முதலீடுகள் மற்றும் உள்ளூர் வணிகங்களை விரிவுபடுத்துவதே தமது பிரதான நோக்கம் என இவர்கள் வாதிடுகின்றனர்.

தற்போதைக்கு இணைய மீம்ஸ்கள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளாக மட்டுமே வலம்வரும் இந்த 'மக்கி ஜனதா கட்சி', எதிர்காலத்தில் ஒரு முறையான டிஜிட்டல் இயக்கமாக உருவெடுக்குமா அல்லது வெறும் நையாண்டியோடு நின்றுவிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT