வெயிலுக்கு விடை கொடுக்கும் மழை! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து நீர்நிலைகள் வறண்டு காணப்படும் சூழலில், தமிழகத்திற்கு நற்செய்தியாக வடகிழக்கு பருவமழை தொடங்கும் தேதியை பிரபல வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பதிவில், "வரும் அக்டோபர் 15-ஆம் தேதியை ஒட்டி (ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவோ தாமதமாகவோ) வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது." "சென்னையில் கடந்த செப்டம்பர் 21-க்குப் பிறகு பெரிய அளவில் மழை பெய்யாத நிலையில், தமிழகத்தை நெருங்கி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி பருவமழை தொடங்குவதற்கு மிகவும் சாதகமாக அமையும். இந்தச் சுழற்சியால் புயல் அபாயம் ஏதுமில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
At last, some good news! - Just 4 more days to go
— Tamil Nadu Weatherman (@praddy06) October 11, 2026
---------------------
The Northeast Monsoon is likely to set in around October 15 (+/- 1 or 2 days). Chennai has been practically rainless since September 21, and Chennai, along with several other parts of Tamil Nadu, desperately… pic.twitter.com/3mGmoHNE5a
மழை வாய்ப்பு
இன்றைய மற்றும் வரவிருக்கும் நாட்களுக்கான மழை வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, அக்டோபர் 12-ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, சிவகங்கை, சேலம், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும், அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.