டெல்லியில் ஜந்தர் மந்தரில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை; புதிய இடங்கள் எவை?
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் பல ஆண்டுகளாக போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் முக்கிய இடமாக விளங்கி வந்த ஜந்தர் மந்தர் பகுதியை போராட்ட தளமாக பயன்படுத்துவதற்கான அனுமதியை டெல்லி காவல்துறை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்த மூன்று புதிய இடங்கள் மாற்று போராட்டக் களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன: 1. ராம் லீலா மைதானம் 2. சிபிடி மைதானம் 3. புராரி மைதானம். இந்த புதிய இடங்களில் போராட்டங்களை நடத்துவது தொடர்பான விரிவான மற்றும் திருத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) தனித்தனியாக வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி
பின்னணியும் தற்போதைய சூழலும்
இந்த அதிரடி மாற்றமானது, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) மற்றும் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக திட்டமிடப்பட்ட பேரணிகள் மற்றும் தொடர் போராட்டங்களுக்கு இடையே வந்துள்ளது.
ஜந்தர் மந்தர் ரத்து செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, ஜந்தர் மந்தர் முடக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.