Loading...

தலைமை தேர்தல் ஆணையர்: செய்தி

01 Nov 2026
• டெல்லி

'தலைமைத் தேர்தல் ஆணையர் சிறைக்குச் செல்வார்': டெல்லி மாபெரும் பேரணியில் ராகுல் காந்தி பேச்சு

டெல்லி ராம்லீலா மைதானத்தில் INDIA சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், SIR நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

01 Nov 2026
• காங்கிரஸ்

CEC-க்கு எதிராக இன்று 'இண்டியா' கூட்டணி டெல்லியில் இன்று பிரம்மாண்ட பேரணி: 4,000 போலீசார் குவிப்பு

SIR நடைமுறையில் 'வாக்குத் திருட்டு' மற்றும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி 'இண்டியா' கூட்டணி ஏற்பாடு செய்துள்ள பிரம்மாண்ட பேரணியும் கண்டன பொதுக்கூட்டமும் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

31 Oct 2026
• காங்கிரஸ்

தேர்தல் ஆணையருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொதுப் பதவிநீக்க தீர்மானம்; கார்கே இல்லத்தில் விவாதம்; முக்கியத் தகவல்கள்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி அடையாள பொதுப் பதவிநீக்க தீர்மான நிகழ்வை நடத்தியுள்ளது.

டெல்லியில் கனமழை காரணமாக தேர்தல் ஆணையருக்கு எதிரான INDIA கூட்டணியின் 'பொது கண்டன பேரவை' நாளைக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக, 'INDIA' கூட்டணி சார்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இன்று நடைபெறவிருந்த பொது கண்டன பேரவை நாளை ஒத்திவைக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

27 Oct 2026
• வாக்காளர்

SIR முறைகேடு மற்றும் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் மீதான மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

வாக்காளர் பட்டியல் SIR தொடர்பாக எழுந்த புகார்கள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது பதவி நீக்கத் தீர்மானம்? சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய பதவி நீக்கத் தீர்மானம் குறித்து, நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகளின்படியே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெளிவுபடுத்தியுள்ளார்.

22 Oct 2026
• பிரான்ஸ்

இந்தியா மற்றும் பிரான்ஸ் போராட்டங்களுக்கு பின்னால் சர்வதேச நெட்வொர்க்? பாக்ஸ் நியூஸ் புலனாய்வு அறிக்கை

பிரான்ஸ் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் இளைஞர் போராட்டங்களை ஒருங்கிணைப்பதாகக் கூறப்படும் 101 சர்வதேச அமைப்புகள் குறித்த அதிர்ச்சித் தகவல்களை ஃபாக்ஸ் நியூஸ் டிஜிட்டல் வெளியிட்டுள்ளது.

21 Oct 2026
• டெல்லி

ஜந்தர் மந்தர் போராட்டம்: CJP நிர்வாகிகளை விடுவிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி ஜந்தர் மந்தரில் தேசியக் கொடியுடன் சென்று போராட்டம் நடத்திய விவகாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிர்வாகிகள் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரை நீதிமன்றக் காவலில் இருந்து உடனடியாக விடுவிக்க டெல்லி சிறப்பு நிர்வாக நடுவர் (SEM) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையர்கள் அமைச்சரவைச் செயலாளருக்கு எழுதிய ரகசிய கடிதம்: RTI தகவலால் வெளிவந்த உண்மை

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் (ECI) தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் தவிர்த்து, மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த ஜூலை 29 அன்று இந்திய அரசின் அமைச்சரவை செயலாளருக்கு அவசரக் கடிதம் எழுதிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவையில் சிறப்பு கூட்டத்தொடர்? தொகுதி மறுசீரமைப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்

SIR மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்தி வரும் சூழலில், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய அரசியல் சாசன திருத்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

16 Oct 2026
• டெல்லி

டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு; 32 ஆயிரம் போலீஸார் குவிப்பு: இன்று என்ன நடக்கிறது?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, காகரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில் இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ள தேசியக் கொடி ஏந்தும் பேரணியை முன்னிட்டு, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு கண்டனம்: 'யாரும் எங்களை மிரட்ட முடியாது' என தலைமை நீதிபதி சூர்யா காந்த் காட்டம்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் SIR-ற்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் கடந்த அக்டோபர் 12 அன்று உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி நடத்தியதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

15 Oct 2026
• மும்பை

பிரபல பாலிவுட் நடிகருக்கு அக்டோபர் 28-க்குள் இந்தியாவை விட்டு வெளியேற மும்பை காவல்துறை நோட்டீஸ்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு மும்பை காவல்துறை கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

14 Oct 2026
• சென்னை

தேர்தல் ஆணையரை கண்டித்து முதல்முறையாக INDIA கூட்டணியுடன் ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கும் தவெக

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளை கண்டித்தும், SIR பணியை எதிர்த்தும் இந்தியா கூட்டணி சார்பில் நாளை சென்னையில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது.

14 Oct 2026
• டெல்லி

CJP தலைவர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்காவுக்கு 5 நாள் சிறை; திகார் சிறையில் அடைப்பு

டெல்லியில் போராட்ட களமாக கருதப்பட்டு வந்த ஜந்தர் மந்தர் பகுதி அண்மையில் போராட்ட மண்டலப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அங்குத் தடையை மீறி நுழைய முயன்ற காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகிய இருவருக்கு 5 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தாவில் பெரும் பரபரப்பு; மம்தா பானர்ஜியை தாக்க முயன்ற கத்தி ஏந்திய பெண்

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மீது, கொல்கத்தா காளிகாட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே பெண் ஒருவர் தாக்குதல் நடத்த முயன்றதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

13 Oct 2026
• மக்களவை

டெல்லி போராட்டத்தில் கர்ப்பிணி பெண் செய்தியாளர் மீது தாக்குதல்? ராகுல் காந்தி மீது பாஜக கடுமையான குற்றச்சாட்டு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் INDIA கூட்டணி சார்பில் நடத்தப்பட்ட பேரணியின் போது, ராகுல் காந்தி, தம்மை இழுத்துத் தள்ளிவிட்டதாக கர்ப்பிணிப் பெண் செய்தியாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 11 எதிர்க்கட்சித் தலைவர்கள் மனு

தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத் (SIR) திட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்களின் பெயர்கள் தன்னிச்சையாக நீக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 11 எதிர்க்கட்சித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

12 Oct 2026
• டெல்லி

டெல்லியில் 'இந்தியா' கூட்டணியின் பிரம்மாண்ட உச்ச நீதிமன்றப் பேரணி: 'தாண்டவப் போராட்டம்' என ராகுல் காந்தி முழக்கம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தியும், தேர்தல் வாக்காளர் பட்டியல் குளறுபடிகளுக்கு எதிராகவும் 'இந்தியா' கூட்டணித் தலைவர்கள் டெல்லியில் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பிரம்மாண்ட 'டெல்லி சலோ' பேரணியைத் தொடங்கியுள்ளனர்.

மத்திய அரசின் 200 அதிகாரிகள் எதிர்க்கட்சிகளுடன் தொடர்பில் உள்ளனர்: ராகுல் காந்தி வெளியிட்ட தகவல்

உச்ச நீதிமன்றத்தை நோக்கி 'இந்தியா' கூட்டணி எம்பிக்கள் மற்றும் தலைவர்கள் 'ஜனநாயகப் பேரணி' புறப்படுவதற்கு முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிக முக்கியக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

12 Oct 2026
• டெல்லி

டெல்லியில் ஜந்தர் மந்தரில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை; புதிய இடங்கள் எவை?

டெல்லியில் பல ஆண்டுகளாக போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் முக்கிய இடமாக விளங்கி வந்த ஜந்தர் மந்தர் பகுதியை போராட்ட தளமாக பயன்படுத்துவதற்கான அனுமதியை டெல்லி காவல்துறை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையரைத் தண்டிக்க முடியுமா? 2023 சட்டப் பிரிவு 16 விளக்கும் உண்மை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (SIR) தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாகக் கூறி சிஜேபி மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பணிநீக்கம் கோரி குடியரசுத் தலைவரிடம் இந்தியா கூட்டணி புகார் மனு

வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பணிநீக்கம் செய்யக் கோரிக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் 10 முக்கியத் தலைவர்கள் நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்தனர்.