Loading...
தேர்தல் ஆணையரை கண்டித்து முதல்முறையாக INDIA கூட்டணியுடன் ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கும் தவெக
முதல்முறையாக INDIA கூட்டணியுடன் ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கும் தவெக

தேர்தல் ஆணையரை கண்டித்து முதல்முறையாக INDIA கூட்டணியுடன் ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கும் தவெக

எழுதியவர் Venkatalakshmi V
Oct 14, 2026
12:11 pm

செய்தி முன்னோட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளை கண்டித்தும், SIR பணியை எதிர்த்தும் இந்தியா கூட்டணி சார்பில் நாளை சென்னையில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் புதிதாக INDIA கூட்டணியில் இணைந்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்(TVK), காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து இப்போராட்டத்தில் களம் காணுகிறது என டைம்ஸ் நொவ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தலைவர்கள் கைது செய்யப்பட்டுத் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் தேசிய அளவில் விவாத பொருளாகியுள்ள நிலையில், சென்னையில் நாளை நடைபெற உள்ளதாக கூறப்படும் இந்தியா கூட்டணியின் போராட்டம் மாநில அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியா கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம்

தவெக சார்பில் பிரதிநிதிகளும், தமிழக காங்கிரஸ் தலைவர் மணிக்கம் தாகூர், விசிக தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயலாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுத் கண்டன உரையாற்றுகின்றனர்.

இதற்கிடையே, டெல்லியில் உச்ச நீதிமன்றத்தின் பதிலுக்காக காத்திருக்கும் எதிர்க்கட்சிகள், வரும் காலங்களில் தேசிய அளவில் போராட்டங்களை தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாநிலக் கட்சிகள் அந்தந்த பிரதேசங்களில் முன்னின்று போராட வேண்டும் என்றும், தேசிய அளவில் 24 மணி நேர எச்சரிக்கையுடன் தலைவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT