Loading...
டெல்லியில் கனமழை காரணமாக தேர்தல் ஆணையருக்கு எதிரான INDIA கூட்டணியின் 'பொது கண்டன பேரவை' நாளைக்கு ஒத்திவைப்பு
INDIA கூட்டணியின் 'பொது கண்டன பேரவை' நாளைக்கு ஒத்திவைப்பு

டெல்லியில் கனமழை காரணமாக தேர்தல் ஆணையருக்கு எதிரான INDIA கூட்டணியின் 'பொது கண்டன பேரவை' நாளைக்கு ஒத்திவைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 30, 2026
02:23 pm

செய்தி முன்னோட்டம்

புதுடெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக, 'INDIA' கூட்டணி சார்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இன்று நடைபெறவிருந்த பொது கண்டன பேரவை நாளை ஒத்திவைக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி,"கனமழையில் அனைவரும் வெளியில் அமர்வது சரியாக இருக்காது என்பதால், இன்றைக்குத் திட்டமிடப்பட்ட நிகழ்வைச் சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கிறோம்". "நவம்பர் 1-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் மிகப்பெரிய பேரணியும் மார்ச்சும் நடைபெறும். டெல்லிக்கு வர விரும்பும் ஆயிரக்கணக்கான மக்களைத் தடுக்கப் பார்க்கிறார்கள். ஆனால் ராம்லீலா மைதானத்தில் சேரும் கூட்டத்தைப் பார்த்து நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அரசு புரிந்து கொள்ளும்" எனக் கூறினார்.

குற்றச்சாட்டு

'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டும் கண்டன நிகழ்வும்

வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைமுறையில் பெரும் முறைகேடுகள் மற்றும் 'வாக்குத் திருட்டு' நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்த போராட்டத்தை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்துள்ளன.

முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார் தலைமை தாங்க, மல்லிகார்ஜுன கார்கே கண்டனத் தீர்மானத்தை கொண்டுவரவுள்ளார்.

ராகுல் காந்தி நிறைவுரையாற்றவுள்ளார்.

அசோகா ஹோட்டல் மற்றும் ராம்லீலா மைதானத்தில் காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, கார்கேவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் தோட்டத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

நவம்பர் 1 அன்று நடைபெறவுள்ள 'சலோ டெல்லி' பிரம்மாண்ட பேரணிக்கு டெல்லி காவல்துறை நிபந்தனையுடன் கூடிய தடையில்லாச் சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT